உங்க வீட்டை துடைக்க, இனிமே எந்த லிக்விடும் தேவை இல்லை. இயற்கையான இந்த பொருட்களை போட்டு வீடு தொடர்ச்சி பாருங்க! கிருமி நாசினியாகவும் இருக்கும்.

mop

நாகரீகம் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நம்முடைய வீடுகளை தண்ணீர் ஊற்றி கழுவும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. காரணம் தரையில் ஒட்டி இருக்கும் டைல்ஸ். அந்த காலங்களில் எல்லாம் நம்முடைய முன்னோர்கள் தண்ணீரை ஊற்றி, அலசி வீட்டை சுத்தமாக கழுவி விடுவார்கள். எந்த ஒரு கிருமியும், தோஷமும் வீட்டில் தங்குவதற்கு, வாய்ப்பே இல்லை.

clean

ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. டைல்ஸ் தரையை மாப் போட வேண்டிய நிலைமை. தடையை துடைக்க கடைகளிலிருந்து செயற்கையான பொருட்களை வாங்கி தான் இன்றளவும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், அதில் எந்த அளவு கிருமிநாசினி உள்ளது என்பது நமக்குத் தெரியாது. இன்றைய சூழ்நிலையில் எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும்? இயற்கையான கிரிமி நாசினியை பயன்படுத்தியே நம் வீட்டை துடைத்து கொள்ளலாமே!

ஒரு பக்கெட் அளவு தண்ணீருக்கு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சிறிய துண்டு அளவு கற்பூரம் எடுத்துக்கொள்ளவேண்டும். கெட்டி கற்பூரம் தான். பூஜை அறையில் ஏற்றுவதற்காக பயன்படுத்தும் கட்டி கற்பூரம் (சூடம்). மெழுகு கற்பூரம் அல்ல. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள். இதோடு சேர்த்து உங்கள் வீட்டின் அருகில் வேப்ப இலை இருந்தால் அந்த வேப்பிலையில் நான்கு இனுக்குகளை எடுத்து, அந்த தண்ணீரில் நுனிக்கு போட்டு கொள்ளுங்கள்.

salt

கல்லுப்பு சேர்ப்பதன் மூலம் நம் வீடுகளில் ஈ, எறும்புத் தொல்லை இருக்காது. இது ஒரு நல்ல கிருமி நாசினி. கற்பூரமும் ஒரு கிருமிநாசினி தான். கற்பூரத்தை  போட்டு வீடு துடைக்கும் போது, நம்முடைய வீடு எப்போதும் நல்ல நறுமணத்தோடு இருக்கும். மஞ்சள்தூள் வேப்பிலை இரண்டும் இயற்கையான கிருமி நாசினிகள். உங்கள் வீட்டில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் வாழ்வதற்கு இடமே இருக்காது.

- Advertisement -

Turmeric

இவை அனைத்தையும், உங்கள் வீட்டின் அளவுக்கு ஏற்ப தண்ணீரில் கலந்து கொண்டு, வீட்டை ஒருமுறை சுத்தம் செய்து பாருங்கள். இதற்கு அதிகமாக செலவும் ஆகாது. எல்லாப் பொருட்களும் நம் வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். இப்படி வீட்டை துடைத்தால், அறிவியல் ரீதியாகவும் மிகவும் நல்லது. ஆன்மீக ரீதியாகவும் மிகவும் நல்லது. அதுவும் இன்றைக்கு உலகம் இருக்கும் சூழ்நிலையில், நம்முடைய வீட்டில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிப்பது நம்முடைய கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
சொன்னா நம்ப மாட்டீங்க! இதை ஒருமுறை உங்க முகத்துல போட்டு பாருங்க. இதை போட்ட, பத்தாவது நிமிஷம் உங்களுடைய முகம் கண்ணாடி போல மாறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have House cleaning tips in Tamil. kirumi nasini. how to mop a floor. how to mop a tile floor