வீட்டுவாசலில் துணி காய போடும் பழக்கம் உங்களிடம் உள்ளதா? அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

cloth-drying2

வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டை சுற்றி இடம் இல்லாத சூழ்நிலை, மொட்டை மாடிக்கு செல்ல முடியாத சூழ்நிலை, இப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் துணிகளை எந்த இடத்தில்தான் உலர்த்துவது. வீட்டு வாசலிலோ அல்லது பால்கனியிலோ உலர்த்தலாம? வீட்டு வாசலில் உலர்த்தக் கூடிய சூழ்நிலை இருந்தால், அந்த வீட்டுப் பெண்கள் என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cloth-drying

பொதுவாகவே விளக்கு வைத்த பின்பு, அதாவது மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை துவைக்க கூடாது என்பது சாஸ்திரம். காலையிலேயே அழுக்குத் துணிகளை துவைக்கும் பழக்கத்தை பெண்கள் வைத்துக் கொள்வது நல்லது. அந்த காலத்தில், நம் முன்னோர்கள் துணிகளை வீட்டு வாசலில் எல்லாம் காய வைக்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு எந்த ஒரு இடம் பற்றாக்குறையும் இல்லை. புழக்கடை என்று சொல்லப்படும் பின் பக்கத்திலோ அல்லது காலி இடங்களிலோ துணிகளை உலத்திக் கொள்ளும் வசதி அவர்களுக்கு இருந்தது.

இந்த கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை காரணமாகவும், மொட்டை மாடிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது பால்கனியில் துணியை காய வைக்க வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. வேறு வழி இல்லாதவர்கள் வீட்டு வாசலில் துணிகளை காய வைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்தத் துணியை மாலை 4 மணி அளவிலேயே வீட்டு வாசலில் இருந்து எடுத்து மடித்து வைத்து விடுங்கள். விலக்கு வைத்த சமயத்தில் ஈரத் துணியோ, காய்ந்த துணியோ வீட்டு வாசலின் முன்பாக தொங்கிக் கொண்டு இருக்கக் கூடாது. அது நம் வீட்டிற்குள் வரக்கூடிய லக்ஷ்மியை தடுத்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. மொட்டை மாடியில் காய வைத்திருக்கும் துணியாக இருந்தாலும் கூட 6 மணிக்கு முன்பாகவே அதை வீட்டிற்குள் எடுத்து வரவேண்டும்.

washing-mechine

அடுத்ததாக ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. நீங்கள் வாஷிங் மிஷினில் துணி துவைத்து, டிரையரில் போட்டு காய வைப்பவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை. சில துணிகளை கைகளில் துவைக்கும் கட்டாயம் இருக்கும் பட்சத்தில், அந்தத் துணிகளில் உள்ள ஈரத்தை உதரக்கூடாது. அந்தத் தண்ணீர் அடுத்தவர்கள் மீது படுவது தவறு என்று சொல்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

அதாவது துணியை உதறும் போது தண்ணீர் தெளிக்கும் அல்லவா? மற்றவர்கள் உதறிய துணியின் தண்ணீர் நம் மீது படக்கூடாது. நாம் உதறிய துணியின் தண்ணீர், மற்றவர்கள் மீதும் படக் கூடாது. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். துணிகளின் சொந்தக்காரர்களுக்கு இருக்கும் தோஷம், அந்தத் தண்ணீரின் மூலம் அடுத்தவர்களை தாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

cloth-drying1

அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டு வாசலில் நீங்கள் செடிகளை வளர்த்து வரலாம். கட்டாயம் அந்த செடிகளின் மீது நீங்கள் காயவைக்கும் துணியின் தண்ணீர் சொட்ட கூடாது. உதறும்போது தெளிக்கவும் கூடாது. குறிப்பாக துளசிச் செடி, கற்பூரவள்ளி, தொட்டாசினுங்கி, எல்லா செடிகளுக்குமே பொருந்தும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். துணியை காய வைப்பதில் கூட இத்தனை சட்டங்களால் என்று கேட்பவர்களுக்கு பதில் இல்லை. ஆனால் இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட நம் வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டுவரும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் குளவி, கூடு கட்டி இருக்கா? அப்படின்னா நீங்க அதிர்ஷ்டசாலியா! துரதிர்ஷ்டசாலியா!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tips for drying clothes outside. Drying clothes. Drying clothes in the house. Drying clothes outside benefits. Clothes drying.