வீட்டில், உடைத்த பழைய தேங்காய் இருந்தாலும் இனி பரவாயில்லை! அதிலும் ஃபிரஷ்ஷாக தேங்காய் சட்னி அரைக்க 1 சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

chutney
- Advertisement -

தேங்காய் சட்னி என்றாலே, அந்த சட்னியை புதியதாக உடைத்த தேங்காய் துருவலில் செய்தால் தான் சட்னிக்கு சுவை அதிகமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு உடைத்த தேங்காயை பிரிட்ஜில் வைத்து விட்டு, அதன் பின்பு அந்த தேங்காயை துருவி சட்னி அரைத்தாலும் அதனுடைய சுவை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். பழைய தேங்காயில் சட்னி அரைத்தாலும், அந்த தேங்காயில் வரக்கூடிய லேசான வாடை வராமல் இருக்க தேங்காய் சட்னி எப்படி அரைப்பது என்பதைப் பற்றிய ஒரு சின்ன டிப்ஸ்தான் இன்னிக்கு தெரிஞ்சுக்க போறோம்.

coconut2

இந்த சட்னிக்கு தேவையான பொருட்கள் துருவிய தேங்காயாக இருந்தாலும் சரி, பொடியாக வெட்டிய தேங்காயாக இருந்தாலும் சரி, 1/2 கப் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். 1/4 கப் பொட்டுக்கடலை, சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, காரத்திற்கு ஏற்ப 4 லிருந்து 5 பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை 2 இனுக்கு, புதினா தழை 2 இனுக்கு.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை போட வேண்டும். தேங்காயை எண்ணெயில் போட்டால், தேங்காயில் இருக்கும் கெட்ட வாடை நீங்கி விடும். தேங்காய் ஒரு நிமிடம் வதங்கிய பின்பு, புதினா கொத்தமல்லி தழையை சேர்த்து மற்றொரு, ஒரு நிமிடத்தை வதக்கிக் கொள்ளுங்கள்.

mint

பழைய தேங்காயில் இருந்து வீசும் அந்த வாடை சில பேருக்கு பிடிக்காது. அதை கெட்டவாடை என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் புதிதாக உடைத்த தேங்காய்க்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு உடைத்த தேங்காய்க்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். பழைய தேங்காயின் அந்த வாடை சூட்டில் வதக்கும்போது நீங்கிவிடும். 2 நிமிடங்கள் வதக்கினாலே போதும்.

- Advertisement -

இந்த கலவை நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் பொட்டுக்கடலையை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கரைத்து ஒரு தாளிப்பு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், தாளித்து கொட்டினால் சட்னியில் உள்ள தேங்காயில் எந்த கெட்டவாடை இருந்தாலும் அது நமக்கு வீசாது என்பது குறிப்பிடத்தக்க.

chutney1

இதே போல் நமக்கு ரோட்டு கடைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இந்த தேங்காய் சட்னியை கொடுப்பார்கள். அதாவது அந்த ரோட்டு கடை தேங்காய் சட்னி, நைஸாக அரைபட்டு இருக்காது. தேங்காய் ஒன்றும் இரண்டுமாக ஆங்காங்கே தெரியும். பச்சை மிளகாய் கூட ஒன்றும் இரண்டுமாக ஆங்காங்கே தெரியும். அதை எப்படி அரைப்பது என்றும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் அளவு தேங்காய் துருவலை போட்டு கொண்டால், இதற்கு 1/2 கப் அளவு பொட்டுக்கடலையை போட வேண்டும். ஏனென்றால் ரோட்டுக்கடை சட்னியில் பொட்டுக்கடலை கொஞ்சம் அதிகமாக சேர்ப்பார்கள். இந்த சட்னிக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும். பச்சை மிளகாய் 5 லிருந்து 6, பூண்டு பற்கள் தோல் உரிக்காமல் 5, தாராளமாக இந்த சட்னியில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

chutney2

அதேசமயம் சட்னிக்கு தேவையான அளவு உப்பைச் சேர்க்கும்போது, 1/4 ஸ்பூன் அளவு சர்க்கரையும் சேர்த்து அரைத்து பாருங்கள். இதன் சுவையில் நல்ல வித்தியாசம் தெரியும். இப்போது இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிய தாளிப்பு ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள். ஒரே பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தான். அதை விதவிதமாக அரைக்கும்போது, வித விதமான சுவையில் வித்யாசமாக நமக்கு கிடைக்கும். அவ்வளவு தான் இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -