முகத்தின் நிறத்தை அதிகரிக்க ஒரு ஃபேஸ் பேக், கரும்புள்ளிகள் நீங்க ஒரு ஃபேஸ் பேக், கருமை நீங்க ஒரு ஃபேஸ் பேக் என்று ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு பேஸ் பேக்கை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். இந்த ஒரு பால் இருந்தால் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் எப்படி சரி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
அழகு என்றதுமே நம் நினைவிற்கு வரும் மாநிலமாக கேரளா திகழ்கிறது. கேரளாவில் இருக்கும் பெண்களின் அழகு இன்றளவும் பலரால் ரசிக்கப்படக் கூடியதாகவே திகழ்கிறது. அதற்கு காரணம் அந்த மாநிலத்தில் அதிகப்படியாக தேங்காய் உபயோகப்படுத்துவது தான். ஆம் தேங்காயை நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் இருக்கக் கூடிய நல்ல கொழுப்பானது நம் உடம்பிற்கு என்றும் இளமையாக இருக்கும் தன்மையை கொடுக்கிறது என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட தேங்காயிலிருந்து தேங்காய் பாலை எடுத்து நம் முகத்திற்கு உபயோகப்படுத்தும் பொழுது நம் முகத்திற்கு பல எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.
முகத்தின் நிறம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேரட் சாறு ஒரு ஸ்பூனும் தேங்காய் பால் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு கழுவும் பொழுது முகத்தின் நிறம் அதிகரிக்கும். மேலும் முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் தேங்காய் பால் ஒரு ஸ்பூன் என்ற விகிதத்தில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு கழுவ முகத்தில் ஏற்படக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி முகம் மிருதுவாகவும் பொலிவாகவும் தென்படும்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சுற்றுச்சூழலால் மாசு மருக்கள் அதிகமாக ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறை தேங்காய் பால் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து முகம், கழுத்து, கை, கால்களுக்கு போட தோல் சருமங்களில் இருக்கக்கூடிய மாசு அனைத்தும் நீங்கி முகம் பிரகாசமாக திகழும். முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறது, அது என்ன செய்தாலும் போகவில்லை என்று வருத்தப்படுபவர்கள் உருளைக்கிழங்கு சாறு ஒரு ஸ்பூன், தேங்காய் பால் ஒரு ஸ்பூன் பச்சை பயறு மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு கழுவ முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி மிகவும் அழகாக முகம் திகழும்.
இவை அனைத்துமே வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தினால் போதும் என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதை ஒரு முறை உபயோகப்படுத்தி பார்த்தாலே நல்ல பலன் கிடைக்கும். பொதுவாக பச்சை பசும்பாலை நம் முகத்தில் தடவும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்கி முகத்திற்கு ஒருவித பொலிவு கிடைப்பதை நாம் உணர்ந்திருப்போம். அதைவிட பல மடங்கு நன்மைகள் தரக்கூடிய பாலாக தான் இந்த தேங்காய் பால் திகழ்கிறது.
இதையும் படிக்கலாமே: முகத்திற்கு விட்டமின் சி சீரம்
வீட்டில் எப்பொழுதும் இருக்கக்கூடிய தேங்காயை வீணாக்காமல் நாம் உணவாகவும் அதே சமயம் நம் முகத்திற்கு தேங்காய் பாலை பயன்படுத்துவதன் மூலமும் என்றென்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.