எப்படிப் பட்ட கஷ்டத்தையும் தூள் தூளாகி கண்ணுக்குத் தெரியாமல் காணாமலாக்கிவிடும் வழிபாடு. இந்த 1 தேங்காயைக் கொண்டு போய் கோவிலில் இப்படி உடைத்து விடுங்கள் போதும்.

coconut-temple

நம்முடைய வாழ்க்கையில் குடும்ப பிரச்சனை இல்லாமல் இருந்தாலே போதும். வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு தேவையான வழிமுறைகளை நாம் தானாக தேடிக்கொள்ளலாம். குடும்பத்திலேயே பிரச்சனை, காலையில் எழுந்த உடனேயே சண்டை சச்சரவு என்றால், அதன் பின்பு மன நிம்மதி இருக்காது. பின்பு வெளியில் சென்று பிழைப்பை எப்படி பார்ப்பது? ஆக வீட்டில் நிம்மதி நிலவ வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கவேண்டும். குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். நோய் நொடியற்ற வாழ்க்கையை பெறவேண்டும் என்பதுதான் எல்லோருடைய வேண்டுதலாகவும் இருந்து வருகிறது.

fight-1

இப்படியாக சாதாரணமாக நமக்கு கிடைக்கக் கூடிய சின்னச் சின்ன சந்தோஷங்கள் மனநிறைவோடு கிடைக்கும் பட்சத்தில், நம்முடைய வாழ்க்கை எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் சுமூகமாக செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி பிரச்சனை, கணவன் மனைவி பிரிவு, அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் சேர்த்து ஆட்டிப் படைக்கின்றது. குறிப்பாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருந்தால், இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

இது ஒரு பரிகாரம் அல்ல. வழிபாடு என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் இறை வழிபாட்டை கோவில்களுக்கு சென்று, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபடுவோம். இறைவனுக்காக அர்ச்சனை செய்யப்படும் இந்த தேங்காயை வைத்து, கொஞ்சம் வித்தியாசமான முறையில் கொஞ்சம் பலமான முறையில் ஒரு வழிபாட்டை செய்யப்போகின்றோம் அவ்வளவுதான்.

coconut

கடையில் சொல்லி அழுகாமல், இருக்க கூடிய ஒரு தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தத் தேங்காயை உங்கள் வீட்டிற்கு வாங்கி வந்து, சுத்தம் செய்துவிட்டு நன்றாக கழுவிவிட்டு, பூஜைக்குத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக மஞ்சளை தண்ணீரில் கரைத்துக் கொண்டு, அந்த மஞ்சளில், வெள்ளை துணியை நனைத்து, அந்தத் துணியை நிழலிலேயே உலர வைத்து, மஞ்சள் நிறமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

கட்டாயமாக மஞ்சள் நிறத் துணி எடுக்க கூடாது. வெள்ளை நிறத் துணியை மஞ்சளில் நனைத்து தான் மஞ்சள் நிறத் துணியாக மாற்ற வேண்டும். அதன் பின்பு தயாராக இருக்கும் தேங்காயின் மேல், முழுமையாக மஞ்சளை பூசி அதை சுற்றி மூன்று குங்கும பொட்டை வைத்துக்கொள்ளுங்கள். இப்போது மஞ்சள் துணியில் இந்த தேங்காயை வைத்து, மேலே தேங்காயின் குடுமிப் பக்கத்தில், முடிச்சி போட்டுவிட வேண்டும். தேங்காய் வெளியில் தெரியாதவாறு முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள். மஞ்சள் நூலால் முடிச்சுப் போட்டுக் கொள்ளலாம்.

coconut

இந்த தேங்காயை ஒரு செம்புத் தட்டில் மேலோ, பித்தளை தாம்புல தட்டில் மேலேயும் வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால், சொம்பின் மேல் கலசம் வைப்பார்கள் அல்லவா? அது போலவே உங்கள் வீட்டு செம்பு சொம்பு அல்லது பித்தளை சொம்பு இருந்தால், அதன் மேல் இந்த தேங்காயை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்‌. தேங்காயின் குடுமி மேல் பார்த்தவாறு இருக்க வேண்டும். சொம்பில் நிறுத்துவதாக இருந்தால், சொம்பில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பரிகாரத்தை நிறைவு செய்த பின்பு அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.

காலையில் இப்படியாக அந்த தேங்காயை தயார் செய்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பூக்களால் சுவாமி படங்களுக்கும், இந்த கலச சொம்புக்கும், அலங்காரம் செய்துவிட்டு, மனதார உங்களது கோரிக்கையை சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். மாலை வரை அந்த தேங்காய் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். அன்று மாலையே உங்களுக்கு விருப்பமான உங்களுடைய இஷ்ட தெய்வ கோவிலுக்கு கொண்டு போய், அந்த தேங்காயை உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து வரலாம். (பெயர் நட்சத்திரம் ராசி சொல்லி அர்ச்சனை செய்ய மறக்காதீர்கள்).

praying-god1

அப்படி இல்லை என்றால் உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று இந்த தேங்காயை உடைத்து கொள்ளலாம். குலதெய்வக் கோயில் வெகு தூரம் உள்ளது என்றால், உங்கள் அருகில் இருக்கும் வேறு ஏதாவது கோவிலுக்கு செல்வதில் தவறில்லை. உங்களுடைய குல தெய்வம் திருப்பதி பெருமாள் ஆக இருந்தால், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் வேறு பெருமாள் கோயில்களுக்கும் சென்று இந்த பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

ஒருமுறை இந்த தேங்காயிடம் நீங்கள் சொன்ன வேண்டுதல் கூடிய விரைவிலேயே பலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில், நம்பிக்கையோடு செய்தால் கைமேல் பலன் அடைய முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.