விதவிதமான சாம்பார் வகைகள் இருந்தாலும் இந்த தேங்காய் சாம்பாருக்கு இணையாகுமா? இப்படி ஒரு முறை தேங்காய் சாம்பார் செய்து பாருங்கள், இனி அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

coconut-sambar1
- Advertisement -

தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளதால் அடிக்கடி சமையலில் பயன்படுத்தினால் நிறையவே நன்மைகளை பெறலாம். எல்லா வகையான உணவு பொருட்களிலும் சிலர் தேங்காய் சேர்த்து கண்டிப்பாக செய்வது உண்டு. தேங்காய் சேர்த்து செய்யப்படாத உணவே சிலருடைய வீடுகளில் பெரும்பாலும் இருப்பது இல்லை. இப்படி தேங்காய்க்கு உணவில் முக்கியத்துவம் கொடுப்பதால் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்து கிடைக்கும். அந்த வகையில் இந்த ருசி மிகுந்த தேங்காய் சாம்பார் எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

coconut-milk-waste

தேங்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – அரை கப், துவரம் பருப்பு – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 2, உருளைக்கிழங்கு – ஒன்று, கேரட் – ஒன்று, பீன்ஸ் – 3, புளி தண்ணீர் – கால் கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவிற்கு.

- Advertisement -

தேங்காய் சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் துவரம் பருப்பை சுத்தம் செய்து அதனுடன் போதிய அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து இறக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். கடாய் காய்ந்ததும் அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் போட்டு பொரிய விடுங்கள்.

coconut-sambar

பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வரும் சமயத்தில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு மைய வதங்கியவுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் சர்க்கரை தூவி பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் மசாலா பொருட்களை சேர்க்கவும். மல்லி தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து புளித் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் குழம்பை அப்படியே கொதிக்க விட வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

குழம்புடன் வேக வைத்த துவரம் பருப்பை மசித்து சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் ஊற்றி உப்பை ஒரு முறை சரிபார்த்து விட்டு குழம்பை கொதிக்க வைத்து விடுங்கள். குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும் மல்லித் தழையை தூவி இறக்கி பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் சுவையான தேங்காய் சாம்பார் தயாராகிவிடும்.

- Advertisement -