பத்து ரூபாய்க்கு இந்த பொருள் மட்டும் வாங்கிக்கோங்க அடுப்பே பற்ற வைக்காமல் சூப்பரான குல்பி ஐஸ் ரெடி பண்ணிடலாம். இத செஞ்சு சாப்பிட்டு பாருங்க அடிக்கிற வெயிலுக்கு சும்மா குளுகுளுன்னு இருக்கும்.

cocunt ice
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஐஸ்கிரீம் என்றால் வேண்டாம் என்று சொல்பவர் யாரும் இல்லை. அதுவும் இப்போ அடிக்கிற இந்த வெயிலுக்கு நல்ல குளுகுளுன்னு ஐஸ்கிரீம் சாப்டா பிரமாதமா இருக்கும். ஆனா அதையும் அதிக விலை கொடுத்து கடையில் வாங்காம நம்ம வீட்ல இருக்க பொருளை வைத்து அடுப்பு கூட பற்ற வைக்காமல் ஒரு சூப்பரான குல்பி ஐஸ் ரெசிபியை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

செய்முறை

முதலில் முழு தேங்காயை உடைத்து அதில் அரை மூடி மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஐஸ் செய்வதற்கு புதிதாக வாங்கிய தேங்காய் தான் பயன்படுத்த வேண்டும். தேங்காய் உடைக்கும் போதே அந்த தண்ணீரை வீணாக்காமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயில் பின்பக்கம் இருக்கும் தோல் அனைத்தையும் நீக்கி விட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக மிக்ஸி ஜாரில் இந்த தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்து இதை அரைப்பதற்கு தண்ணீருக்கு பதிலாக நாம் தேங்காய் உடைக்கும் போது எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்

இப்போது ஒரு பவுலில் பத்து ரூபாய் பால் பவுடர் பாக்கெட் ஒன்று வாங்கிக் அதை சேர்த்துக் கொள்ளுங்கள். பால் பவுடரை சேர்ந்த பின் சர்க்கரை பவுடர் 3 டேபிள் ஸ்பூன் (சக்கரையை மிஸ்சியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்) சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் ஒன்றாக கலக்க அரை கப் காய்ச்சாத பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு நாம் அரைத்து வைத்து தேங்காய் விழுதையும் இதில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு இந்த கலவை மிகவும் திக்காக இருந்தால் கொஞ்சமாக பால் சேர்த்துக் கொள்ளுங்கள் தண்ணீர் ஊற்றக் கூடாது.

இவையெல்லாம் ஒன்றாக கலந்த பிறகு உங்களிடம் ஐஸ்கிரீம் மோல்டு இருந்தால் அதில் இதை ஊற்றி கொஞ்சம் கூட காற்று போகாத வண்ணம் ஐஸ்கிரீம் மீது கவர் வைத்து மூடி விடுங்கள். உங்களிடம் மோல்டு இல்லை என்றால் சில்வர் டம்ளர், டீ கப் போன்றவற்றை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

போல்டில் ஊற்றிய இந்த ஐஸ்கிரீமை எட்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மேலே மூடி இருக்கும் கவரை எடுத்து விட்டு , இப்பொழுது ஐஸ் கிரீம் குச்சியை அதில் சொருகி வைத்து கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து நாம் தயார் செய்து வைத்த ஐஸ்கிரீமை மோல்டுடன் தண்ணீரில் 10 செகண்ட் வைத்து எடுத்தால் மோல்டில் இருந்து ஐஸ்கிரீம் சுலபமாக வெளியே வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: தக்காளி கடையல் செய்முறை:(Tomato kadayal Recipe in Tamil)

அதிக செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே ரொம்ப சுலபமா இந்த குல்பி ஐஸ்க்ரீம் செஞ்சுரலாம். நீங்களும் இத உங்க வீட்டு குட்டிஸ்கு செய்து குடுத்து அசத்துங்க.

- Advertisement -