பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இப்படி ஆரோக்கியமான காலிஃபிளவர் ஸ்நாக்ஸை செய்து கொடுத்துப் பாருங்கள், சட்டென காலியாகிவிடும்

coliflower
- Advertisement -

காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ் ஒரு சுவையான மொறுமொறுப்பான மாலை நேர உணவு வகை. இது காலிபிளவர், உருளைக்கிழங்கு, அரிசி மாவு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் சுவையாக இருக்கும். அது தவிர குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு. இதனை நாம் மதிய உணவு அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ்செய்து அனுப்பலாம். இது வழக்கமான போண்டா அல்லது கட்லெட் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி,  டொமேடோ கெட்சப் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த காலிஃப்ளவர் ஸ்நாக்ஸை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 150 கிராம், அரிசி மாவு – 1/2 கப், உருளைக்கிழங்குகள் – 2, வெங்காயம் – 1, கொத்தமல்லி – சிறிதளவு, சோம்பு – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கார்ன் ஃப்ளோர் – 1, உப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 250 கிராம்.

- Advertisement -

செய்முறை:
காலிஃப்ளவர் ஸ்நாக்ஸ் செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் சூடாக்கவும். அதனுடன் 150 கிராம் அளவு காலிஃப்ளவர் சேர்த்து,  அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளவும். 5 முதல் 7 நிமிடங்கள் மிதமான தீயில் வெந்த பின்னர்,  தண்ணீரை வடித்து விட்டு, காலிஃப்ளவரை தனியே வைக்க வேண்டும்.

பிறகு இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்,  அதனை கேரட் துருவும் கட்டையில் துருவி தனியாக எடுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும், தண்ணீர் சூடானதும் அரை கப் அரிசி மாவு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மிதமான தீயில் ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு கைவிடாமல் கிளறவும். வேகவைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அரிசி மாவுடன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அதனுடன் வேகவைத்த காலிஃப்ளவர் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, அரை ஸ்பூன் சோம்பு, சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கான்பிளவர், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

நன்கு கலந்து மென்மையான மாவு பிசைந்து கொள்ளவும்.இப்பொழுது சிறிது சிறிதாக உருட்டி நறுக்கிக்கொள்ளவும். மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு பொரித்துக் கொள்ளவும் அல்லது பொன்னிறமாகும் வரை பொரித்து கொள்ளவும். சுவையான காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ் தயாராகிவிடும்.

- Advertisement -