வயதானாலும் இளமை தோற்றத்தை பெற, சருமம் எப்போதும் பளபளன்னு மின்னிக் கொண்டே இருக்க, கொலாஜன் சத்து நிறைந்த இந்த ஜூஸை 1 டம்ளர் மட்டும் குடிங்க போதும்.

face2
- Advertisement -

பொதுவாகவே நம்முடைய உடலில் இருக்கும் கொலாஜன் சத்து குறைந்து விட்டால் நம்முடைய சருமம் வயதான தோற்றத்தை பெறும். தோல் சுருக்கம் அதிகரிக்கும். சிறுவயதிலேயே, வயதானது போல சிலபேர் இருப்பாங்க இல்லையா? அதற்கு அவர்களுக்கு இருக்கும் கொலாஜென் குறைபாடும் ஒரு காரணம். நீங்கள் பார்ப்பதற்கு எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் இந்த கிரீன் கொலாஜன் ஜூசை வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொண்டாலே போதும். ஆயுள் முழுவதும் இளமையாக இருக்கலாம். வாங்க அந்த கொலாஜன் பூஸ்டர் ஜூஸை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பின் சொல்லக்கூடிய பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக போட வேண்டும். மீடியம் சைஸில் இருக்கும் பாதி வெள்ளரிக்காயை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ளுங்கள். தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், புதினா இலைகள் – 15 திலிருந்து 20, எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள்ஸ்பூன், பாலக் கீரை – 1/2 கைப்பிடி அளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு 200ml தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். பச்சை நிறத்தில் ஒரு ஜூஸ் கிடைத்திருக்கும்.

- Advertisement -

இதை அப்படியே வடிகட்டாமல் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. உங்களுக்கு ஒருவேளை அப்படியே குடிக்க பிடிக்கவில்லை என்றால் இதை வடிகட்டி குடித்துக் கொள்ளலாம். காலை உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வெறும் வயிற்றில் இந்த சாரை குடித்துவிட வேண்டும்.

இளமையாக இருக்க வேண்டும் என்றால் வாரத்தில் ஒருநாள் கட்டாயம் இதை குடிக்கணும். தேவைப்பட்டால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடித்தாலும் தவறு கிடையாது. தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த ஜூசை குடித்து வந்தால் உங்களுடைய சருமத்தில் நல்ல வித்தியாசத்தை பார்க்கலாம்.

- Advertisement -

இதோடு சேர்த்து நீங்கள் தண்ணீரை அதிகமாக பருகி வரவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீரை குடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய ஆரோக்கியமும் சருமமும் நன்றாக இருக்கும். உங்களுடைய உணவில் பால், முட்டை, மீன், இறைச்சி, கடல் சார்ந்த உணவுப் பொருட்கள், பச்சைநிற காய்கறிகள், கீரைகள், அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

காஃபைன் என்று சொல்லப்படும் வேதிப்பொருள் கலந்த உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடும் போது நம்முடைய தோலில் சுருக்கம் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே நீங்கள் சருமம் பளபளப்பாக ஆக வேண்டும் என்பதற்காக முயற்சிகளை எடுத்து வந்தால் காஃபைன் கலந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக காபி டீ குடிப்பதை குறைக்க வேண்டும். நிறைய எண்ணெயில் பொரித்த பேக் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிட்டாலும் சரும பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

உடலில் இருக்கும் கொலாஜெனின் சத்தை சீராக வைத்துக்கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒரு டம்ளர் பச்சை நிற ஜூஸ் போதுங்க. உங்கள் உடம்புக்கு தேவையான கொலாஜன் சத்தை கொட்டிக் கொடுத்து விடும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -