- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இந்த மார்கழியில் உங்க வீட்டு வண்ணக்கோலம் தான், பாக்குறவங்க கண்ணை எல்லாம் பறிக்கிற அளவுக்கு பளிச்சுன்னு...

இந்த மார்கழியில் உங்க வீட்டு வண்ணக்கோலம் தான், பாக்குறவங்க கண்ணை எல்லாம் பறிக்கிற அளவுக்கு பளிச்சுன்னு இருக்கும். வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு இந்த மார்கழிக்கு வண்ண கோலங்கள் போட்டு அசத்திடலாம்.

- Advertisement -

இந்த மார்கழி மாதத்திற்கு என நிறைய விசேஷங்கள் உண்டு அதில் குறிப்பானது வாசலில் போடும் வண்ண வண்ண கோலங்கள். இந்த மாதத்தில் தான் இந்த வண்ணக் கோலங்களை நாம் அதிகமாக காண முடியும். மார்கழி தொடங்கி பொங்கல் வரை பெரும்பாலான வீடுகளில் இப்படி வண்ண வண்ண கோலம் போட்டு வாசலை அழகு படுத்துவது வழக்கம். இப்படி வண்ணங்களை பார்ப்பது கண்களுக்கும் மனதிற்கும் ஒரு நிறைவான விஷயம். இப்போது இந்த பதிவில் அந்த அந்த அழகிய வண்ணங்களை நாம் வீட்டிலே எப்படி தயாரிப்பது என்பது குறித்து பயனுள்ள வீட்டு குறிப்பு பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த வண்ணங்களை தயாரிக்க முதலில் கோலமாவை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் கோலமாவு எடுத்தால் அதே போல ஒரு கப் அரிசி மாவு எடுக்க வேண்டும். இரண்டையும் சமமாக கலந்தால் தான் வண்ணங்களை இதில் சேர்த்து போடும் போது அழகாக இருக்கும். இப்போது ஒவ்வொரு வண்ணத்தையும் எதை கொண்டு தயாரிப்பது என்று பார்க்கலாம்.

- Advertisement -

பச்சை நிறம் தயாரிக்க உங்களிடம் வேப்பிலை இருந்தால் ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளுங்கள். அது இல்லை என்றால் பச்சை நிறத்தில் உள்ள கறிவேப்பிலை,கொத்தமல்லி, புதினா இலை, எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது வேப்பிலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இன்னொரு ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஈரம் இல்லாமல் சுத்தமாக துடைத்து, அதில் கொஞ்சம் இந்த அரிசி மாவு, கோல மாவு கலந்த மாவை சேர்த்து அத்துடன் இந்த வேப்பிலை சாறை கொஞ்சமாக சேர்த்து மிக்ஸியில் ஒரு முறை அரைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் பச்சை நிறம் தயாராகி விட்டது. இதை தனியாக ஒரு பேப்பரில் பரப்பி நிழலில் ஆற விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இதே போல் சிகப்பு நிறத்திற்கு குங்குமத்தை, கொஞ்சம் தண்ணீரில் கரைத்து அதை கோலமாவில் சேர்த்து அதையும் இதே போல் மிக்ஸி ஜாரில் அரைத்து ஆரம்பித்து கொள்ளுங்கள். இதே போல பீட்ரூட்டையும் அரைச்சு பயன்படுத்தலாம்.

நீல நிறத்திற்கு எழுத பயன்படுத்தும் இங்கை கரைத்து கோலமாவில் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இதையே உஜாலா சேர்த்தும் அரைக்கலாம், இரண்டும் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும். நீலம் ஊற்றி செய்வது வெளிர் நிறத்திலும். இங்கை ஊற்றி செய்வது கத்தரிப்பூ நிறத்திலும் கிடைக்கும். இதே நீலத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக சேர்த்தால் கருப்பு நிறம் கிடைக்கும். சிகப்பு நிறத்திற்கு தக்காளியும் அரைத்து சாறெடுத்து அதையும் சேர்க்கலாம். ஆரஞ்சு நிறம் வேண்டுமென்றால் அதற்கு கேரட்டை அரைத்து அதையும் இதை போல் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் நிறத்திற்கு சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை கரைத்து அதையும் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். அதே போல் ஆரஞ்சி, லெமன், போன்றவற்றிக்கு சமையலுக்கு பயன்படுத்தும் புட் கலர்களை தண்ணீரில் கலந்து இதே போல பயன்படுத்தலாம்.

- Advertisement -

ஒரு சில நேரங்களில் மாவு கட்டி கட்டியாக இருப்பது போல் தோன்றும், அப்படி இருந்தால் நீங்கள் கலக்கும் போது தண்ணீர் அதிகமாகி இருந்தால் இப்படி வர வாய்ப்பு அதிகம். இதை நீங்கள் நிழலில் ஆற வைத்த பிறகு மறுபடியும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்தால் கோலம் போடும் பக்குவத்திற்கு வண்ண பொடி தயாராகிவிடும். இதை கலக்கும் போது நேரடியாக அப்படியே கலக்கக் கூடாது. அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து அதை கோலமாவில் சேர்த்து அரைத்து சேர்த்தால் தான் நிறம் சரியாக இருக்கும். அதே நேரம் மாவிலும் நிறம் சரியாக கலந்து இருக்கும். இதை வெயிலில் காய வைத்து விடாதீர்கள் நிறங்கள் வெளுத்துப் போய் விடும்.

இதையும் படிக்கலாமே: இது மட்டும் இருந்த போதும் உங்க வீட்டு சமையல் பாத்திரம் எல்லாம் புதுசு போல மின்னும். அது என்ன பொருள்ன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா, வாங்க அது என்னன்னு தெரிஞ்சிக்கலாம்.

இவ்வளவு செய்வதற்கு கடையிலே வாங்கிக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைப்பதும் தெரிகிறது. ஆனால் இந்த வண்ணங்களை நம்மால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாமே தயாரித்துக் கொள்ள முடியும் என்பதற்காக தான் இந்த பதிவு. அது மட்டும் இன்றி கடைகளில் சில நிறங்கள் கிடைக்காது அந்த சமயங்களில் இந்த குறிப்பு உதவியாக இருக்கும். இதில் இன்னொரு விஷயம் உண்டு இரண்டு நிறங்களை ஒன்றாக சேர்த்து செய்யும் போது வெவ்வேறு புதிய நிறங்களும் நமக்கு கிடைக்கும் இதை நீங்கள் கடைகளில் வாங்க முடியாது.

சற்று முன்