IND vs AUS ODI : வீரர்கள் மட்டுமின்றி வர்ணனையாளர்களும் இந்திய ராணுவ வீரர்களுக்கு செய்த மரியாதை என்ன தெரியுமா ? – வீடியோ

Koli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கி ஆடி வருகின்றனர். இன்று இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிலிட்டரி கேப் அணிந்து விளையாடி வருகின்றனர் .

Toss

இந்த கேப்பினை இந்திய வீரர்களுக்கு சீனியர் வீரரான தோனி அளித்தார். தோனிக்கு இந்த கேப்பினை கேப்டன் கிங் கோலி அளித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் இந்த தொப்பியினை அணிந்து விளையாடுகின்றனர்.

- Advertisement -

இதுமட்டுமின்றி இந்த போட்டியை தொகுத்து வழங்கும் இந்திய வர்ணனையாளர்களான கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் மிலிட்டரி தொப்பி அணிந்தே வர்ணனை செய்து வருகின்றனர். ஆனால், வர்ணனை அறையில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஹெய்டன்னுக்கு இந்த தொப்பி வழங்கப்படவில்லை.

- Advertisement -

இதனால் ஹெய்டன் வருத்தமுடன் தனது வர்ணனையினை தொடர்ந்தார். இருப்பினும் இந்திய வர்ணனையுலாளர்களின் இந்த செயல் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றபடி உள்ளது.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -