இத்தனை வருஷமா சமைக்கிறோம்! ஆனால், இந்த டிப்ஸ்களை எல்லாம் இதுநாள் வரை தெரிஞ்சுக்காமலேயை விட்டுட்டோமே.

kitchen-tip7

பாத்திரத்தில் வீசும் இஞ்சி பூண்டு வாடை நீங்க:
நம்முடைய சமையலறையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வைக்கும் டப்பா, அசைவம் சமைக்கும் பாத்திரங்கள் என்று சில பாத்திரங்களில், சில வாடைகள் தொடர்ந்து வீசிக் கொண்டே இருக்கும். என்னதான் சுத்தம் செய்து வெயிலில் உலர வைத்தாலும் அந்த வாசம் நீங்காது. இப்படிப்பட்ட பாத்திரங்களுக்கு உள்ளே கொஞ்சமாக பேஸ்டை போட்டு சாதாரண ஸ்க்ரப்பரை தண்ணீரில் நனைத்து, பாத்திரத்தை நுரை வரும் அளவிற்கு தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு சாதாரண லிக்விடை போட்டு சுத்தம் செய்து பாத்திரத்தை கழுவி விட்டாலே போதும். அதன் உள்ளே இருக்கும் அசைவ வாசம், இஞ்சி பூண்டு பேஸ்ட் வாசம் இருந்தாலும், பூக்களின் வாசம் இருந்தாலும் அது உடனடியாக நீங்கிவிடும்.

kitchen-tip8

பால் கெட்டுப்போகாமல் இருக்க:
சில சமயங்களில் நம்முடைய வீட்டில் பால் கெட்டுப் போவது என்பது இயல்புதான். காலையில் காய்ச்சிய பாலை மீண்டும் காய்ச்சாமல் மறந்து விட்டால், அந்தப் பால் மாலை நேரத்தில் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த பாலினை பார்த்த உடன் நமக்கு தெரியும். இந்த பாலை மீண்டும் காய்ச்சினால் கெட்டுப் போய்விடும் என்று, இப்படிப்பட்ட சமயத்தில் அந்த பாலில் ஒரு சிட்டிகை சோடா உப்பு (ஆப்ப சோடா) சேர்த்து அதன் பின்பு அந்த பாலைக் காய்ச்சினால் கெட்டுப்போகாமல் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க. அடிக்கடி சோடா உப்பு சேர்த்து பாலை காய்ச்சி குடிக்க கூடாது. பால் காய்ச்ச மறந்த சமயத்தில் மட்டும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணலாம்.

தாளிக்கும் கடுகு சிதறாமல் இருக்க:
பெரும்பாலும் சமையலுக்கு எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த கடுகை தாளிக்கும்போது சிதறி கட்டாயம் வெளியே தெறிக்கும். அப்படி தெரியாமல் இருக்க எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட்டு ஒரு கரண்டியை வைத்து அதை கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது கடுகு அதிகமாக சிதறி வெளியே விழாது.

kitchen-tip9

குக்கர் கைப்பிடி அடிக்கடி கழண்டு விழாமல் இருக்க:
நிறைய பேர் வீடுகளில் குக்கரில் இருக்கும் கைப்பிடி ஒரு பிரச்சனையாகவே இருக்கும். என்னதான் அழுத்தம் கொடுத்து முடிக்கி விட்டாலும், அது மறுபடி மறுபடி லூசாகி ஆடிக்கொண்டே இருக்கும். முதலில் குக்கரின் நெட்டை தனியாக கழட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த குக்கர் உடைய நெட்டில், (ஆணியில்) கொஞ்சமாக உங்கள் வீட்டில் இருக்கும் நைல் பாலிசை மேலே தடவி, அந்த ஈரம் ஆறுவதற்குள் அந்த நெட்டை குக்கரில் போட்டு டைட் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு குக்கர் மூடி கைப்பிடி அடிக்கடி கழண்டு விழுவதற்கு வாய்ப்பே கிடையாது. ட்ரை பண்ணி பாருங்க.

meen-kuzhambu3

குழம்பு தண்ணியாகமல் இருக்க:
சில சமயம் நாம் சமைக்கும் போது பக்குவம் தவறுவது இயற்கையான ஒரு விஷயம் தான். சாம்பார் குருமா குழம்பு போன்றவை சமைக்கும்போது தண்ணீராக மாறி விட்டால் என்ன செய்வது. கொஞ்சமாக பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பொட்டுக்கடலை மாவை 1/2 ஸ்பூன் எடுத்து, 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து அந்த குழம்பில் ஊற்றி, ஒரு கொதி விட்டால் போதும். குழம்பு சட்டென கெட்டியாக மாறி விடும். ட்ரை பண்ணி பாருங்க.