பசுமாட்டிற்கு என்னென்ன தெய்வீக ஆற்றல் உள்ளது தெரியுமா ?

Pasu
- Advertisement -

இந்த உலகில் ஆதிவாசியாக பண்படாதவனாக மனிதன் இருந்த காலத்திலேயே அப்போது காட்டு விலங்குகளாக இருந்த விலங்குகளில் சிலவற்றை அவன் பழக்கி, தன்னுடைய தேவைக்காக அவற்றை வளர்க்கத்தொடங்கினான். அப்படி பழங்காலம் தொட்டே மனிதர்களின் வாழ்வில் நீங்கா இடம்பெற்றிருக்கும் விலங்குகள் தான் பசு மாடு மற்றும் காளை மாடு. ஆயர் குலத்தில் பிறந்த கண்ணன் தனது பசுமாடுகளின் மீது வைத்திருந்த அன்பும், அந்த பசுமாடுகள் கண்ணனின் அன்பில் நனைந்ததையும் நாம் அறிவோம். இந்த விலங்குகள் இந்து மதத்திலும், இந்தியர்களின் வாழ்விலும் ஒரு உன்னத இடத்தை பெற்று விட்டது. அப்பசுமாடுகளின் சில தன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

cow

மனிதனின் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க முடியாத தருணங்களில் அதை ஈடு செய்வது இந்த பசுமாட்டின் பால் தான். ஆட்டின் பால் நல்லது என்றாலும் சில குழந்தைகளுக்கு அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது. குதிரை, கழுதையின் பால் சக்தி நிறைந்தது என்றாலும் அது சுலபத்தில் கிடைக்காதது. எனவே தாய்ப்பாலை ஈடு செய்யுக் கூடிய பாலை நமக்கு வழங்கும், நம்முடனே வாழும் பசுமாட்டை கோமாதா என்று நம் முன்னோர்கள் அழைத்தனர்.

- Advertisement -

பசுவின் சாணம் மகத்துவம்

பசுமாட்டின் சாணமும், அதன் கோமியமும் மருத்துவகுணமும் அதே நேரத்தில் ஆன்மிக ஆற்றலை கொண்டதாகவும் இருக்கிறது. குறிப்பாக பசு மாட்டின் சாணக்கரைசலை தினமும் வீட்டிற்கு முன் பூசி மொழுகினால் தீய சக்திகள் வீட்டிற்குள் அண்டாது. இந்த பசுமாட்டின் சாணக்கரைசலை அக்காலங்களில் விஷ முறிவு மருந்தாகவும் பயன்படுத்தினர்.

பசுமாட்டிற்கு வீட்டிலிருக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறையான சக்தியை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் அதிகம். எனவே தான் புதிதாக கட்டிய வீடுகளில் கிரக பிரவேசத்தின் போது கன்றிட்ட ஒரு பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருகின்றனர். அப்படியான நேரங்களில் அந்த வீட்டிற்குள் அந்த பசுமாடு சாணமிட்டு சிறுநீர் கழித்தால் அந்த வீட்டிலிருக்கும் துஷ்ட சக்திகள் விலகியதாக எடுத்துக்கொள்வார்கள்.

- Advertisement -

cow

ஞானிகள் கருத்து

“விலங்குகளிலேயே மிகவும் கருணை நிறைந்த கண்களைக் கொண்ட விலங்கு பசு மாடு தான். அதன் காரணமாகவே இந்துக்கள் அதை தெய்வமாக வழிபடுகிறார்கள்” என பசுமாட்டை பற்றி கூறியுள்ளார் “ஞானி ஓஷோ”. “பசுமாட்டின் பால் வற்றியவுடன் அதன் கழுத்தில் கத்தியை வைப்பது மிகவும் நன்றிகெட்ட செயல்” என கண்டிக்கிறார் “அரேபிய ஞானி மிர்தாத்”.

தெய்வீக அதிர்வலை

பசுமாட்டிற்கு தெய்வீக அதிர்வுகளை உணரும் ஆற்றல் அதிகம். இன்று நாம் காணும் சில கோவில்களில் சுயம்பு மூலவர் சிலைகள் பெரும்பாலும் பசுமாடு அதன் மீது பால் சொரிந்து மக்களுக்கு அடையாளம் காட்டியவையாகும். இப்படி பட்ட பசுமாடுகள் எந்த வீட்டில் அன்புடன் நடத்தப்பட்டு, பராமரிக்க படுகிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். மேலும் அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பசுமாடுகள் சரியாக கவனிக்கப்படாமல், துன்புறுத்தப்படும் வீடுகளில் அனைத்து வகையான சீர்கேடுகளும் ஏற்படும். மேற்கூறிய இரண்டு விடயங்களும் பலரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவ உண்மையாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தான தர்மங்களை எப்போது செய்தால் அதிக புண்ணியம் பெறலாம் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், தமிழ் மந்திரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அனைத்து விடயங்களையும் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

Enligh overview:
Here we described some devotional benefits of cow. It can also be said as Pasu Madu patriya katturai in Tamil. The cow is beneficial to the human in different ways. All are explained above.

- Advertisement -