சேனைக்கிழங்கை இப்படி க்ரஸ்பியாக செய்து கொடுத்தால் இதனை பிடிக்காதவர்கள் கூட இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

seppankilangu-fry1
- Advertisement -

சைவ உணவுகளை விட, அசைவ உணவுகளை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். அதிலும் ஒரு சில காய்கறிகளை சுத்தமாக உணவுடன் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்து விடுகின்றனர். அவ்வாறு பாகற்காய், புடலங்காய், பூசணிக்காய், சேனைகிழங்கு இது போன்ற காய்கறி வகைகளை பலரும் விரும்புவதில்லை. ஆனால் இவற்றில் உடம்பிற்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதமான ஊட்டச் சத்தை நமது உடலுக்கு அளிக்கிறது. எனவே எந்தவித காய்கறியாக இருந்தாலும் அதனை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது என்பது தான் நமது உடல்நலத்திற்கு நன்மையாக அமையும். அவ்வாறு பிடிக்காத காய்கறிகளை சற்று வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி இந்த சேனைக்கிழங்கை இப்படி மொறுமொறுவென பொரித்து கொடுக்கும் பொழுது வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சேனைக்கிழங்கு வறுவலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சேனை கிழங்கு – 500 கிராம், சோள மாவு – ஒரு ஸ்பூன், கடலை மாவு – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 200 மில்லி, உப்பு – முக்கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 500 கிராம் சேனைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்க்க வேண்டும். அதனுடன் தண்ணீர் ஊற்றி இரண்டு, மூன்று முறை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சேனைக்கிழங்கில் மண் அதிகமாக இருக்கும். பிறகு மறுபடியும் நான்கு அல்லது ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பின்னர் சேனைக்கிழங்கை வெளியே எடுத்து அவற்றை ஆற வைத்து, அதன் மேல் உள்ள தோலை சுத்தமாக உரித்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள சேனை கிழங்கு துண்டுகளை சேர்த்து, அனைத்தையும் ஒன்று சேர கலந்துவிட வேண்டும். சேர்த்துள்ள மாவுகள் அனைத்தும் சேனை கிழங்கில் முழுவதுமாக ஓட்டுமாறு அனைத்தையும் கலந்து விட வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 200 மில்லி எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள சேனைக் கிழங்குத் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவேண்டும். இவற்றை எண்ணெயில் சேர்த்தவுடன் நுரைத்து கொதிக்க ஆரம்பித்து, சிறிது நேரத்தில் மொறுமொறுவென்று சிவந்து பொரிய ஆரம்பிக்கும். பின்னர் அதனை வெளியே எடுத்து சாப்பிட பரிமாறி கொடுக்க வேண்டும்.

- Advertisement -