எண்ணெய் குடிக்காத மொறுமொறுன்னு சுவையான முறுக்கு 10 நிமிடத்தில் வீட்டில் செய்ய இந்த 4 பொருள் இருந்தா போதுமே!

pottukadalai-murukku_tamil
- Advertisement -

வெறும் அரிசி மாவு வைத்து செய்யப்படும் முறுக்கை விட இது போல பொட்டுக்கடலை சேர்த்து செய்யும் பொழுது ரொம்பவே ருசியாக இருக்கிறது. மொறு மொறுன்னு கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத முறுக்கு ரெசிபி வீட்டிலேயே எளிதாக எப்படி தயார் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – ஒரு கப், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சூடான எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

பொட்டுக்கடலை முறுக்கு செய்வதற்கு முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பொட்டுக்கடலை மாவை ஒரு சலிக்கும் சல்லடையில் போட்டு சலிக்க வேண்டும். அதே சல்லடையில் அரிசி மாவும் சேர்த்து சலித்துக் கொள்ளுங்கள். இரண்டு மாவையும் சலித்து எடுத்த பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

சீரகத்தை கைகளால் நன்கு தேய்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அதனுடைய சுவையும், மணமும் நன்றாக இருக்கும். பின்னர் சிறு குழி கரண்டி அளவிற்கு எண்ணெயை சூடாக்கி கொள்ளுங்கள். சூடான இந்த எண்ணெயை மாவுடன் சேர்த்து மாவை நன்கு பிசைய வேண்டும். எல்லா இடங்களிலும் எண்ணெய் படும்படி நன்கு கைகளால் பிசைந்த பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு மாவை பிசைய வேண்டும்.

- Advertisement -

அரிசி மாவு மட்டும் சேர்த்து செய்யும் முறுக்கை விட இது போல பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்யும் பொழுது ரொம்பவே ருசியாக இருக்கும். மாவை அதிக ஈரப்பதம் இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக பிசைய வேண்டும். அப்போதுதான் எண்ணெய் அதிகம் குடிக்காது. மாவை உருண்டையாக பிசைந்து வைத்த பிறகு, சிறு சிறு மாவமாக எடுத்து நீங்கள் முறுக்கு பிழியும் பாத்திரத்தில் போட்டு வழக்கம் போல முறுக்கு பிழிவது போல சுற்றி பிழிய வேண்டும். முறுக்கு பிழியும் பொழுது எப்பொழுதும் கரண்டிக்கு பின்புறம் வைத்து பிழிந்தால் எண்ணெயில் போட்டு எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
வெறும் பத்து ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கி இந்த புளி மிளகாய் செஞ்சு பாருங்க. இட்லி, தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் பக்கா சைடு டிஷ் தயிர் சாதத்துக்கு இதை வைத்து சாப்பிட்டீங்கன்னா அல்டிமேட்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். முறுக்கு சுட்டு எடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மாவை கரண்டியின் பின்புறம் முறுக்கு போல பிழிந்து எண்ணெயில் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவே சுவையாக மொறுமொறுன்னு இருக்கும் இதை ஏர் டைட் கண்டைனரில் டிஷ்யூ பேப்பர் வைத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அப்படியே கிரிஸ்பியாக மொறுமொறுன்னு இருக்கும். நீங்களும் இதே மாதிரி பொட்டுக்கடலை முறுக்கு ரெசிபி ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -