- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி அமாவாசை காகத்திற்கு உணவளிக்கும் முறை

ஆடி அமாவாசை காகத்திற்கு உணவளிக்கும் முறை

- Advertisement -

அமாவாசை என்றாலே அது முன்னோர்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் தெய்வ வழிபாட்டை செய்வதற்கு மாறாக முன்னோர்களின் வழிபாட்டை செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைப்பதுதான். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை சண்டை சச்சரவுகள் ஏற்படும். நிம்மதியற்ற வாழ்க்கை உண்டாகும். எந்தவித சுபகாரியங்களும் நடைபெறாது. அப்படியே நடைபெற்றாலும் அதில் பல தடைகளும் தடங்கல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படி இதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் உண்டாகும். இந்த கஷ்டங்களும் தடைகளும் நீங்குவதற்கு முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு அமாவாசை தினத்தன்று காகத்திற்கு எந்த முறையில் உணவு வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி அமாவாசை காகத்திற்கு உணவளிக்கும் முறை

அமாவாசை தினத்தன்று நாம் செய்யக்கூடிய தானம் என்பது நம்முடைய முன்னோர்களுக்கு சென்று சேரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்யும் இடத்தில் ஐயர்களுக்கு பச்சரிசியை தானமாக தருவார்கள். அதே போல் பசு மாட்டிற்கு அகத்திக் கீரையையும் பழங்களையும் தானமாக தருவார்கள். அடுத்தார் போல் காகத்திற்கு உணவளிப்பார்கள். இப்படி நாம் அமாவாசை தினத்தன்று எந்த உயிருக்காவது நாம் தானம் செய்தோம் என்றால் அந்த தானம் நேரடியாக நம்முடைய முன்னோர்களை சென்று அடையும். அப்படி முன்னோர்களை சென்று அடைவதன் மூலம் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் ஒரு சில வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது நமக்கு இன்னும் அதிகப்படியான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஒரு வருடத்தில் வரக்கூடிய அமாவாசையில் முக்கியமான அமாவாசையாக கருதப்படுவது மூன்று அமாவாசைகள். தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளில் நாம் முன்னோர்களை வழிபட்டால் அந்த வருடம் முழுவதும் நாம் முன்னோர்களை வழிபட்டதற்கு சமம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இந்த மூன்று அமாவாசை தினங்களில் பலரும் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி இல்லாதவர்களாக இருந்தாலும் சரி அன்றைய தினம் வீட்டில் சமைத்த உணவை எச்சில் படுவதற்கு முன்பாக காகத்திற்கு வைத்துவிட்டு பிறகு அந்த உணவை உண்பது என்பது முன்னோர்களின் வழிபாட்டில் ஒரு முக்கியமான அங்கமாக திகழ்கிறது. அப்படி இந்த ஆடி அமாவாசை தினத்தன்று காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது எந்த முறையில் வைத்தால் முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

அன்றைய தினம் நாம் வடித்த சாதத்தில் கருப்பு எள்ளை கலந்து சிறிது நல்லெண்ணையை ஊற்றி உங்களுடைய கைகளால் பிணைந்து அதை முன்னோர்களுக்கு சமர்பித்து விட்டு பிறகு காகத்திற்கு வைக்க வேண்டும். இப்படி காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது வெறும் தரையில் வைக்காமல் வாழை இலையை போட்டு அதற்கு மேல் இந்த எள் சாதத்தை வைக்க வேண்டும். இப்படி செய்வது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.

- Advertisement -

இதோடு ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான குடிக்கும் தண்ணீரை ஊற்றி வைத்து உணவளித்தோம் என்றால் நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதனால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளும் தாமதங்களும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: ஆடி அமாவாசை செய்ய வேண்டிய தானம்

மிகவும் எளிமையான இந்த வழிமுறையை பின்பற்றி காகத்திற்கு நாம் உணவு வைத்து வழிப்பட்டோம் என்றால் நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்