காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! பாவம் வந்து சேரும்.

crow-food
- Advertisement -

காகம் மூலமாக நம்முடைய பித்ருக்கள் அதாவது முன்னோர்கள் ஆசி புரிவதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. காகம் பசியாற நாம் வைக்கும் உணவு பல விதமான தோஷங்கள் போக்கவும் நமக்கு உதவுகிறது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. காகத்திற்கு சாதம் வைப்பது, அது போல் மற்ற பறவைகளுக்கு சாதம் வைப்பது, விலங்குகளுக்கு உணவு வைப்பது மிகப்பெரிய புண்ணியத்தை நமக்கு சேர்க்கும். தினமும் இரவில் நாய்க்கு சோறு வைத்து பாருங்கள்! காலபைரவர் உங்களுடன் இருந்து, உங்களுடைய கடன் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.

crow feeding

அது போல நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களில் கூட நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் பெறும். அது நமக்கே தெரியாமல் புண்ணியக் கணக்கில் சேரும். அப்படி ஒரு புண்ணியம் தான் காகத்திற்கு சோறு வைப்பது என்பது. பண்டிகை காலத்தில் மட்டும் தான் காகத்திற்கு சோறு வைக்க வேண்டும் என்று ஒன்றும் சட்டம் இல்லை. தினமும் காகத்திற்கு சோறு வையுங்கள். இது மிகப்பெரிய புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும். காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! இதனால் பாவம் சேரும் என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

காகம் மாமிசம் சாப்பிட்டாலும், நாம் காகத்திற்கு உணவு படைக்கும் பொழுது மாமிச உணவை படைக்கக் கூடாது என்பது நியதி. கறி, மீன் போன்ற மாமிச உணவுகள் மீந்து விட்டால் அதை காகத்திற்கு வைத்துவிடக் கூடாது. அதற்கு பதிலாக நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வைக்கலாம். ஆனால் காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இது சாதாரண ஒரு விஷயம் அல்ல!

food

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும், விஷேசங்களிலும் நம்முடைய வீட்டில் நைவேத்தியங்கள் படைத்து காகத்திற்கு வைத்த பின்னர் தான் நாம் அதை எடுத்துக் கொள்கிறோம். இதில் ஆன்மீக ரீதியான நிறைய காரணங்கள் உள்ளன. பித்ருக்களின் ஆசி கிடைக்கவும், முன்னோர்களின் சாபங்கள் நீங்கவும் இது போல் நாம் கடைபிடித்து வருகிறோம். அதை சரியாக செய்ய வேண்டும் அல்லவா?

- Advertisement -

காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது அந்த உணவை வேறு எந்த பறவைகள் எடுத்தாலும், அதில் குற்றம் குறை ஒன்றும் இல்லை. நல்லது தான் நடக்கும். அதை நினைத்து வருத்தப்பட தேவையே இல்லை. ஒரு சிலர் என்ன நினைக்கிறார்கள்? என்றால், காகத்திற்கு உணவு வைத்தோம் ஆனால் காகம் வந்து எடுக்கவில்லையே! இதனால் ஏதாவது அபசகுணம் நிகழுமா? என்றெல்லாம் யோசிப்பார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. காகத்திற்கு சாதம் வைப்பது நம்முடைய கடமை, எடுப்பதும் எடுக்காததும் பொறுத்து சகுனம் எதுவும் கூறப்படவில்லை.

crow

ஆனால் வைக்கும் உணவு எச்சில் படாத சுத்தமான உணவாக இருக்க வேண்டும். சாப்பிட்டு மீந்து போன உணவை காகத்திற்கு கொண்டு போய் வைத்தால் பாவம் தான் வந்து சேரும். சுத்த அன்னத்தைக் தினமும் சமைத்து முடித்த பின்னர் முதல் வேலையாக காகத்திற்கு சிறிது கொண்டு போய் வையுங்கள். அதனுடன் விட்டு விடாமல் பக்கத்தில் சிறிது தண்ணீர் அருந்தும் படியாக காகத்திற்கு வையுங்கள். இதனால் மிகப்பெரிய நன்மைகளும், வாழ்வில் மாற்றங்களும் உங்கள் நடக்கும் என்பது உறுதி.

- Advertisement -

water-for-crow

அது போல் மாமிச உணவை காகத்திற்கு தவறியும் வைத்து விடாதீர்கள். நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு மாமிச உணவை வையுங்கள். காகத்திற்கு எப்படி உணவு படைப்பது புண்ணியம் சேர்க்குமோ? அதே போல் தான் விலங்குகளுக்கு உணவு வைப்பதும் மிகப்பெரிய புண்ணியத்தை தரும். தீராத கடன் பிரச்சினைகள் இருப்போர் நாய்களுக்கும், குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்போர் காகத்திற்கும் இது போல் முறையாக உணவு படைத்து வாருங்கள். தொடர்ந்து இது போல் செய்து வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
சொந்த வீடு கட்ட 5 ரூபாய் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -