முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு இருக்கிறதா? பித்ருக்களின் ரூபத்தில் இருக்கும் காகம் இதை எப்படி வெளிப்படுத்தும்.

pithru-tharpanam-crow-padaiyal
- Advertisement -

பொதுவாகவே நம்முடைய வீடுகளில் அமாவாசை தினம் அன்று பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்து விட்டு, சாதத்தை காகத்திற்கு வைப்போம். அப்படி வைக்கும்போது காகம், அந்த சாப்பாட்டை எப்படி எடுக்கிறது! என்பதை வைத்தே முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம். இதுமட்டுமல்லாமல் நம்முடைய குடும்பம் வளமான முன்னேற்றத்தை பெறப் போகிறது என்பதையும் நமக்கு இந்த காகம் உணர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம் வீட்டிற்கு சாப்பாடு சாப்பிட வரும் காகத்தின் செயல்பாட்டை வைத்து, நம் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை சொல்லி விடலாம். நீங்களும் காகத்திற்கு சாப்பாட்டை வைத்து விட்டு, இதையெல்லாம் கவனித்து தான் பாருங்களேன்! உங்கள் வாழ்க்கையில் பிற்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை கட்டாயம் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

crow-tree

அமாவாசை தினத்தன்று நீங்கள் காகத்திற்கு சாதம் வைக்கும்போது, அந்த காகமானது, பசுமையான மரத்திலிருந்து வந்து உணவினை எடுத்துக் கொண்டு, மீண்டும் பசுமையான மரத்திற்கே சென்றால் உங்களது வாழ்க்கை எப்போதும் செழிப்பாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதாவது பிற்காலத்தில் நீங்கள் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை பெறப் போகிறீர்கள் என்பதை குறிக்கும்.

- Advertisement -

நீங்கள் சாதத்தை காகத்திற்கு வைத்த பின்பு, அது உங்களுக்கு இடது பக்கத்திலிருந்து பறந்து வரும் பட்சத்தில், நீங்கள் செய்யும் தொழில் லாபத்துடன் செல்லும் என்பதிலும், பல வகையான பிரச்சினைகள் சுலபமாக தீரும் என்பதையும், முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைத்துவிட்டது என்பதையும் குறிப்பதாக அர்த்தம்.

Crow

சில பேர் இதை கவனித்து இருக்கலாம். நீங்கள் காகத்திற்கு சாதத்தை வைத்த பின்பு, அந்த சாதத்தை காகம் சாப்பிட்ட பின்பு, அருகிலிருக்கும் ஏதாவது ஒரு பசு மாட்டின் மேல் அமர்ந்தால், பின்வரும் பல தலைமுறைகளுக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி நடந்தால் உங்களது குடும்பம் மிக மிக அதிர்ஷ்டமான குடும்பம் என்பதிலும் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கூட தேவையில்லை. அதாவது நீங்கள் மொட்டைமாடியில் சாதத்தை வைத்திருக்கலாம் அந்த காகம் அதை வாயில் எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு பசு மாட்டின் மேல் போய் அமரலாம். இதை எல்லோரும் பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நீங்கள் பார்க்காத சமயம் நடந்தால் கூட அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அமாவாசை தினத்தன்று காகம் பன்றியின் மேல் அமர்ந்திருப்பது போல் காட்சியை நீங்கள் நேரில் கண்டீர்கள் என்றால், உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர போவதாக அர்த்தம்.

crow-on-pig

அமாவாசை தினத்தன்று காகம் நீங்கள் வைக்கும் சாப்பாட்டை சாப்பிட வரும் போது, அதன் வாயில் பசுமையான நிறத்தில் இருக்கும் புல், பூவையோ எடுத்துக்கொண்டு வந்தால் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பித்ருக்கள் என்றும் துணையாக நிற்பார்கள் என்பது அர்த்தம்.

- Advertisement -

crow feeding

இதேபோல் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தானியக் குவியலைக் வைத்திருந்தாலோ அல்லது அந்த தானியத்தை உளர வைப்பதற்காக வைத்திருந்தாலும், அந்த இடங்களில் சிலரது வீட்டில் காகம் வரவே வராது. ஆனால் சிலரது வீட்டில், காகம் கூட்டம் கூட்டமாக வந்து அந்த தானியங்களை சாப்பிடும். இப்படியிருக்க உங்களது தொழில்  முன்னேற்றம் அடையும் என்பதையும், உங்கள் வீட்டில் தன தானியத்திற்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது என்பதையும் குறிப்பதாக அர்த்தம்.

இதையும் படிக்கலாமே
பெண்களின் மீது வீசக் கூடாத வாசனையா! சாமுத்ரிகா லட்சணம் என்ன சொல்லுகிறது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Crow shastra. Kagam palan Tamil. Kagam palangal. Kagam palangal in Tamil.Crow sastram in Tamil. Crow benefits in Tamil.

- Advertisement -