அன்றாடம் பயன்படுத்தும் தயிரில் இதுவரை நாம் அறியாத எண்ணற்ற ரகசியங்கள்

நம் உணவுப் பழக்க வழக்கங்களில் தயிருக்கென்று ஒரு முக்கிய இடம் உண்டு. நம் உணவு முறையில் சாம்பார், ரசம் இவைகளை உண்டபின் கடைசியாக தயிர் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் ஜீரணமாக வேண்டும் என்பதற்காகத்தான். பாலை தயிராக மாற்றும் பொழுது அதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள், நம் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் உள்ள பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உணவுடன் சேர்த்து தயிர் சாப்பிடும் போது 97% உணவானது உடனே ஜீரணிக்கப்படும்.

curd

தயிரில் உள்ள சத்துக்கள்
தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது.

வயிற்றுப்போக்கை சரி செய்யும்
நமக்கு வயிற்று வலி வயிற்றுப்போக்கு ஏற்படும்போது தயிர் ஒரு கப்புடன், வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலியும், வயிற்றுப் போக்கும் நின்றாவிடும். சில சமயங்களில் உணவில் காரம் அதிகமாக சேர்ந்து விட்டால், காரத்தின் மூலம் ஏற்படும் வயிற்று வலி, வயிற்றெரிச்சலையும் இது தவிர்த்து விடும்.

curd

உடலில் உள்ள கால்சியம் அதிகரிக்கும்
கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்புகளும், பற்களும் பாதிப்படையும். சிலருக்கு எலும்பு தேய்மானம் மூலம் மூட்டுவலி, நடக்கவே முடியாத அளவிற்கு இருக்கும். சிலருக்கு கால்சியம் சத்துக் குறைவினால் பற்களில் உறுதியற்ற தன்மை இருக்கும். இதனை சரிசெய்ய தினமும் நம் உணவில் தயிரினை சேர்த்துக்கொள்ளலாம். தயிரில் உள்ள கால்சியம் சத்தானது இதனை சரி செய்கிறது.

- Advertisement -

சரும அழகிற்கு
சிலருக்கு சருமம் வறட்சி நிலையுடன் கலை இழந்து காணப்படும். ஒரு கப் தயிருடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால் முகம் மெருகேறும். வாரம் இருமுறை இதனை தொடர்ந்து செய்து வர வேண்டும். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

curd

பொடுகு தொல்லை நீங்கும்
நம் தலையில் உள்ள பொடுகை நீக்க தயிர் ஒரு சிறந்த மருந்தாகும். முடியின் வேர் பகுதியில் நன்றாகப் படும்படி தயிரை தடவி மசாஜ் செய்து பின் தலைக்கு குளித்துவந்தால் பொடுகு தொல்லை நிரந்தரமாக நீங்கிவிடும். தயிரில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி தான் இதற்கு காரணம். நீங்கள் தலையில் தேய்க்கும் தயிரானது புளிப்பாக இருந்தால் முடி மிகவும் மிருதுவாக ஆகிவிடும். தயிரானது புளிக்காமல் இருக்க சிறிய துண்டு தேங்காயை அதில் போட்டு வைக்க வேண்டும். இதனால் இரண்டு மூன்று நாட்கள் கூட தயிர் புளிக்காமல் இருக்கும்.

உடல் எடையை குறைக்க
உடல் எடையை குறைக்க தயிர் ஒரு சிறந்த மருந்தாகும். நம் உடம்பில் சுரக்கும் ஹார்மோன் சுரப்பிகள் சமமாக சுரக்கவில்லை என்றால் உடல் பருமன் ஏற்படும். ஹார்மோன் சுரப்பிகளை தயிர் சீராக்குகிறது.

curd

மன அழுத்தம் நீங்கும்
உடலிலுள்ள சூடு குறைந்து குளிர்ச்சி உணர்வைப் பெற்றாலே நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. உடல் நலம் சீராகி விடும். இதனால் மன அழுத்தமும், பதற்றமும் தானாகவே குறைந்து காலப்போக்கில் தெளிவான சிந்தனையும், மன அமைதியும் கிடைத்துவிடும்.

மூலநோய் சரி செய்யப்படும்
மூல நோயினால் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு தயிர் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தயிருடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் இதற்கான நல்ல பலன் கிடைக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

curd

மாதவிடாய் சமயங்களில்
பெண்களுக்கு இந்த சமயங்களில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும், வயிற்று வலியும் அதிகமாகவே இருக்கும். இதனை சரிசெய்ய அந்த சமயத்தில் தயிர் சாதம் சாப்பிட்டு வரலாம். இது தவிர ஈஸ்ட் தொற்று நோயால் பாதிக்கப்படும் பெண்கள்  தயிர் சாப்பிட்டு வந்தால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

இதயத்திற்கு
கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்பாடாக வைத்திருந்தாலே நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சக்தியானது தயிரில் இருக்கிறது. தயிரினை சீரான முறையில் நம் உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமான இதயத்தை பெறலாம். தயிரினை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. தயிரினை சூடுபடுத்திய போதும் அதன் சக்தியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

இதையும் படிக்கலாமே
மருத்துவ குணங்கள் ஏராளம் நிறைந்துள்ள கரிசலாங்கண்ணியின் பயன்கள்

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Curd benefits in Tamil. Curd uses in Tamil. Curd payangal in Tamil. Thayir nanmaigal in Tamil. Thayir payangal.