வீட்டில் உறைமோர் ஊற்றிய தயிர் புளித்துப் போகாமல், கெட்ட வாடை அடிக்காமல் இருக்க நச்சுனு 4 டிப்ஸ் இதோ!

curd-chilli-ginger
- Advertisement -

நம் அன்றாட உணவில் தயிர் சேர்ப்பது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாகும். தினமும் உணவில் தயிர் சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலு கிடைக்கும். இதனால் இளம் வயதிலேயே எலும்பு தேய்மானம் ஏற்படாமல் வலுவுடன் இருக்கும். ஒரு வேளை உணவில் மட்டுமாவது கொஞ்சம் தயிர் சேர்த்து சாப்பிடுவது நலம் பயக்கும். அத்தகைய தயிரை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட நாம் வீட்டிலேயே உறைமோர் ஊற்றி வைத்து தயிராக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஆனால் அப்படி சாப்பிடும் பொழுது உறைமோர் வெகு விரைவாகவே புளித்து விடுகிறது! அல்லது கெட்ட வாடை அடிக்கிறது! என்று கூறுபவர்கள் இனி வரும் குறிப்புகளை பயன்படுத்தி அந்த தொல்லையிலிருந்து நிவாரணம் பெறலாமே! என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

curd

முதலில் உறைமோர் ஊற்ற பயன்படுத்தும் பால் ஜில்லென்று குளிர்ந்த நிலையில் இருக்கக்கூடாது. கொஞ்சமாவது வெதுவெதுப்புடன் இருந்தால் விரைவாக பால் தயிராக கெட்டியாக மாறும். உறைமோர் ஊற்றுவதற்கு ஒன்றிலிருந்து இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கெட்டியாக இருக்கும் தயிரை சேர்த்தால் போதும். இதற்கு மேல் அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அதிகம் தயிர் சேர்த்தாலும் சீக்கிரம் புளித்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு, எனவே அப்படி செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உறைமோர் ஊற்ற பயன்படுத்தும் பாத்திரம் மண் ஜாடியாக இருந்தால் மிகவும் நல்லது. மண் ஜாடியில் உறைமோர் ஊற்றி வைத்தால் அதிக நேரம் புளிக்காமல் பாதுகாக்கலாம். அப்படி மண் ஜாடி இல்லை என்றால் பித்தளை, வென்கலம், பீங்கான் ஜாடி போன்றவற்றிலும் ஊற்றி வைக்கலாம். எவர்சில்வர், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் விரைவாக தயிர் புளித்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உறைமோர் ஊற்றிய பால் தயிராக உறைந்ததும் ஃபிரிட்ஜில் எடுத்து வைத்து விடுங்கள். இப்படி செய்வதாலும் தயிர் சீக்கிரம் புளிக்காமல் பாதுகாக்கலாம்.

curd-with-chilli

இரவு ஊற்றி வைத்த உறைமோர் தயிராக உறைந்ததும் காம்பு நீக்காத பச்சை மிளகாய் ஒன்றை நன்கு கழுவி தயிருடன் கலந்து வையுங்கள். பச்சைமிளகாய் புளிப்பு சுவை உருவாவதை தடுக்கும். எனவே எவ்வளவு நேரமானாலும் தயிர் புளிக்காமல் பிரஷ்ஷாக இருக்கும். காம்பு நீக்காமல் சேர்ப்பதால் தயிரில் பச்சை மிளகாய் உடைய வாசனையோ அல்லது காரத் தன்மையோ ஏற்படாமலிருக்கும்.

- Advertisement -

உறைந்த தயிரில் நான்கைந்து புதினா இலைகளை நன்கு கழுவி போட்டு வைத்தாலும் தயிர் விரைவாக புளிக்காது. புதினா இலைகள் புளிப்பு தன்மையை இழுத்துவிடும் ஆற்றல் கொண்டது. நாலைந்து தேங்காய் சில்லுகளை வெட்டி தயிருடன் சேர்த்து போட்டு வைத்தாலும் தயிர் விரைவாக புளிக்காது. ஏற்கனவே புளித்த தயிரில் இப்படி செய்தாலும் தேங்காய் ஆனது புளிப்பை ஈர்த்துவிடும். இதே போல இஞ்சி துண்டுகளையும் சேர்த்து செய்து வைக்கலாம்.

நீங்கள் உறைமோர் ஊற்ற பயன்படுத்தும் பாத்திரத்தை தயிர் கெட்டியானதும் உடனே மாற்றிவிடுவது நல்லது. அதே பாத்திரத்தை பயன்படுத்தும் பொழுது தயிர் விரைவாக புளிக்கும் அபாயம் உண்டு. மேலும் தயிரை வேறு பாத்திரத்திற்கு மாற்றிய பிறகு பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் மீதமிருக்கும் தயிரை பயன்படுத்தக் கூடாது. இப்படி பயன்படுத்துவதாலும் தயிர் விரைவாக புளித்துவிடும். அடிக்கடி உறைமோர் ஊற்ற பயன்படுத்தும் பாத்திரத்தை கழுவி சுத்தமாக மாற்றி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது தயிரானது விரைவாக கண்டிப்பாக புளிக்காது. நீண்ட நேரம் வரை அப்படியே பிரஷ்ஷாக கெட்டித்தயிராக நல்ல சுவையுடன் இருக்கும். இந்த தயிர் தான் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் கட்டாயம் தினமும் ஒரு கப் தயிரை சாப்பிடக் கொடுங்கள்.

- Advertisement -