வெண்டைக்காயை வைத்து இப்படிக்கூட ஒரு கிரேவி வைக்கலாமா? அதுவும் வெறும் 5 நிமிடத்தில். உங்களுக்காக சூப்பர் ரெசிபி!

vendaikai
- Advertisement -

எப்போதுமே நம்முடைய வீடுகளில் வெண்டைக்காயை வைத்து வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் புளி குழம்பு தானே செய்வோம். கொஞ்சம் வித்தியாசமாக வட இந்தியர்கள் செய்யக்கூடிய ஒரு ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சாதத்திற்கும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக்கொள்ளலாம். சப்பாத்தி, ஃபுல்கா இவைகளுக்கும் சைட் டிஷ் ஆக வைத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமானதும், சுவையானதும், சுலபமானதும் இது! சீக்கிரமே ரெசிபியை பார்த்திடலாம் வாங்க.

vendaikai1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, 6 லிருந்து 10 வெண்டைக்காய்களை சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கி, அந்த எண்ணெயில் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். வதக்கிய வெண்டைக்காய்களை ஒரு தட்டில் எடுத்து வைத்துவிடுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அந்த கடையில் இன்னும் கொஞ்சம் கிரேவிக்கு தேவையான எண்ணெயை ஊற்றி, சூடு படுத்திக் கொள்ளுங்கள். சீரகம் – 1ஸ்பூன், பிரியாணி இலை – 1, கிராம்பு – 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, இவைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

vendaikai2

அதன் பின்பு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தனியா தூள் 1 – ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், இவைகளை சேர்த்து, 30 வினாடிகள் இந்த மசாலா பொருட்களின் பச்சை வாசம் போகும் அளவிற்கு வதக்கி விட்டு, 1/4 கப் (250 ml) தயிரை நன்றாக தண்ணீர் ஊற்றி கரைத்து கடாயில் ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

தயிரை ரொம்பவும் கட்டியாகவும் ஊற்ற கூடாது. மோர் போல தண்ணீராகவும் ஊற்றக்கூடாது. கட்டித் தயிரை ஸ்பூனால் அடித்து கலந்து, கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கரைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். தயிரை ஊற்றி இந்த குழம்பை மிதமான தீயில், 2 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவேண்டும். (இந்த 2 நிமிடமும் குழம்பு திறந்தே இருக்கலாம். அடிக்கடி கரண்டியை விட்டு தயிரை கலந்து விட்டுக் கொண்டே இருங்கள்.)

curd

உங்களுக்கே தெரியும் இதில் எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் சமயத்தில், வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை குழம்பில் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு மூடி போட்டு 4 லிருந்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டால் போதும். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விட்டால் வெண்டைக்காய் கிரேவி தயார்.

- Advertisement -

vendaikai3

‘தாஹி பிந்தி’ Dahi Bhindhi என்பது இந்த ரெசிபியின் பெயர். வடமாநிலத்தவர்கள் செய்யும் இந்த ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் பிடிக்கும். எப்போதுமே ஒரே மாதிரி சமையலை வீட்டில் செய்து சாப்பிட்டால் போரடிக்கும். கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இதை ட்ரை பண்ணி பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
அட, மீதமான அடை மாவை வைத்து இப்படி ஒரு இட்லியை சுட முடியுமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் புளித்த அடை மாவை கீழே ஊற்றி விட்டோமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -