ஒரே நாளில் 5 முறை நிறம் மாறும் அதிசய லிங்கம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்.

color-changing-lingam

உலகை காத்து அருளும் சிவபெருமானின் தலங்களில் அதிசயத்திற்கு எப்போதும் குறைவில்லை என்றே கூறலாம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கே உள்ள நல்லூர் என்னும் ஊரில் உள்ள கல்யாண சுந்தரேசுவரர் கோவிலில் தினம் தினம் அரங்கேறும் ஒரு அதிசயத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

color changing lingam

ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் உள்ள சுயம்பு லிங்கம் தினமும் பகலில் ஆறு நாழிகைகளுக்கு ஒரு முறை நிறம் மாறி பக்தர்களை மெய்சிலிர்க்கவைக்கிறது.

காலை 6 முதல் 8.24 வரை தாமிர நிறத்திலும், காலை 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு நிறத்திலும், காலை 10.49 முதல் 1.12 வரை உருக்கிய தங்கம் போன்ற நிறத்திலும், மதியம் 1.13 முதல் 3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும், மாலை 3.37 முதல் 6 மணி வரை இன்ன நிறம் என்று அறிய முடியாத வண்ணத்திலும் இங்குள்ள இறைவன் காட்சி அளிப்பது காணக் கிடைக்காத அருங்காட்சியாகும்.

ஒரேநாளில் எப்படி இந்த லிங்கம் இத்தனை முறை நிறம் மாறுகிறது என்பதை கண்டறியமுடியாமல் ஆராய்ச்சியாளர்கள் இன்றுவரை வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.