கொரோனாவை அடுத்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆபத்து! வெட்டுகிளிகளால் நமக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்படுமா? பஞ்சாங்கம் என்ன சொல்கிறது!

vettukili

கொரோனா பாதிப்பிற்க்கான தீர்வே, இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. கொரானாவால் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய, இன்னும் எத்தனை காலம் ஆகும் என்பதும் தெரியாது. மக்களுடைய மனநிலமையானது சோர்ந்து போயிருக்கும் இந்த காலகட்டத்தில், அடுத்து பிரச்சனை நம்மை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது, என்ற அதிர்ச்சித்தகவல் ஆற்காடு பஞ்சாங்கத்தில் வெளியாகியுள்ளது. வெட்டுக்கிளிகளால், நமக்கு அடுத்தகட்டமாக பேராபத்து வருமா? என்பதை பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த விகாரி வருடம் வெளியான பஞ்சாங்க குறிப்பிலேயே, அந்த ஆண்டின் இறுதியில், கொடிய வைரஸின் தாக்கம் நம்முடைய நாட்டிற்கு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், வைரஸ் நம்மை தாக்குவதற்கு முன்பு, அதை யாரும் நம்பவில்லை. கொரோனா வின் பாதிப்பு நம் நாட்டிற்குள் நுழைந்த பின்பு தான், பஞ்சாங்கத்தையே திரும்பி பார்த்தோம்.

அதேபோல், சார்வரி வருடம் வெளியாகியிருக்கும் பஞ்சாங்க குறிப்பிலும், வெட்டுக்கிளிகளால் நம்முடைய நாட்டிற்கு, கடும் பாதிப்பு ஏற்படும், இதனால் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், இதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டின் அண்டை நாடுகள், நம்மிடம் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், இதனால் பெரும்பாதிப்பை நம் நாடு சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருட குறிப்பின்படி, புயல் மழையால் பேராபத்து வரும் என்றும், சொல்லப்பட்டுள்ளது.

vettukili

இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் நமக்கு காத்துக் கொண்டிருக்கின்றது! என்று சொல்லி மக்களை பயமுறுத்துவதற்காக இல்லை, பஞ்சாங்க குறிப்புகள். வரக்கூடிய பிரச்சினைகளை எல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்டோமேயானால், பாதிப்புகள் குறைக்கப்படும் என்பதற்காகத்தான்.

அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வரக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதை விட, வேறு வழியே இல்லை. எது எப்படியாக இருந்தாலும் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வை அந்த இறைவனால் மட்டும் தான் தர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.