உங்களின் மனக்குழப்பங்கள் நீங்க, யோக வாழ்வு பெற இதை துதியுங்கள்

dattatreya

உலகில் தோன்றிய அனைத்து உயிர்களின் பிறத்தல் வாழுதல் இறத்தல் என்கிற சுழற்சி முறையில் சிக்கி தவிக்கின்றன இவற்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் மீறுவதற்கு ஒரே வழி இறைவனை அறிந்து கொள்ளும் தன்மையான ஞானம் அடைவது ஆகும் அந்த ஞானத்திற்கான வழியை போதிப்பதற்கு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவாக தோன்றியவர் ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆவார். அவருக்குரிய ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம் இது

dattatreya

தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்

ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தன்னோ தத்தஹ ப்ரசோதயாத்

மும்மூர்த்திகளின் அம்சமான ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறிய காயத்திரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 27 முறை துடிப்பது நன்மைகளைத் தரும். வியாழக்கிழமைகளில் காலையில் குரு பகவான் சன்னிதியில் குரு பகவானுக்கு மஞ்சள் நிறப் பூக்களை சமர்ப்பித்து, இந்த மந்திரத்தை 108 முதல் 1008 முறை துதித்து வழிபடுவதால் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும். வாழ்வில் துரதிருஷ்டங்களும், தரித்திரங்களும் நீங்கி பல யோகங்கள் ஏற்படும். மனக்குழப்பங்கள் நீங்கி சித்தம் தெளிவு பெறும்.

dattatreya

படைத்தல் தொழிலை பிரம்மா, காத்தல் தொழிலை விஷ்ணு, அழித்தல் தொழிலை சிவன் ஆகிய மூன்று தொழில்களையும் இந்த மும்மூர்த்திகள் செய்து உலகின் சமநிலையை காக்கின்றனர். இந்த மும்மூர்த்திகளின் அம்சமாக பூமியில் பிறந்தவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். மனிதர்களுக்கு உயரிய ஞானத்தை போதிக்கும் ஞான குருவாக இருந்தவர். அவருக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை துதித்து ஜெபிப்பவர்களுக்கு ஒருபோதும் தீமைகள் நேராது.

இதையும் படிக்கலாமே:
மனக்கவலைகள் தீர்க்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dattatreya gayatri mantra in Tamil. It is also called as Dattatreya mantra in Tamil or Yogangal erpada in Tamil or Dattatreya slokas in Tamil or Manakulapam theera in Tamil.