தெரியாமல் கூட இந்த எண்ணெயில் தீபம் ஏற்றவே கூடாது. நம்முடைய குடும்பத்திற்கு பேராபத்து வந்துவிடும்.

deepam
- Advertisement -

இறைவனுக்காக நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளில், தீப வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தீப வழிபாட்டில் நாம் அறியாமல் கூட, எந்த ஒரு சின்ன தவறும் செய்து விடக் கூடாது. அது நம்முடைய குடும்பத்திற்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் தினம் தோறும் நாம் ஏற்கக் கூடிய விளக்கில் எந்த எண்ணெய் ஊற்ற வேண்டும், எந்த எண்ணெய் ஊற்றக் கூடாது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

deepam

முதலில் நம் வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் இவை இரண்டைத் தவிர வேறு எந்த எண்ணையையும் ஊற்றவே கூடாது. உங்களுடைய வீட்டின் நலனிற்காக வீட்டில் கஷ்டம் தீருவதற்காக ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று, வேறு ஏதாவது எண்ணையை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும் என்றாலும் கூட, அந்த எண்ணெயை மண் அகல் விளக்கில் ஊற்றி ஏற்றலாம். தவிர இலுப்பை எண்ணெய், 5 எண்ணெய் சேர்ந்த கூட்டு எண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய் இப்படியாக எந்த எண்ணையையும் காமாட்சி அம்மன் தீபத்தில் ஊற்றி ஏற்றவே கூடாது, என்று நம்முடைய சாஸ்திரத்தில் சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்தபடியாக, நம் சமையலுக்குப் பயன்படுத்தும் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் ஆயில் இந்த எண்ணெய்களில் தீபம் ஏற்றவே கூடாது. அகல் தீபத்தில் கூட இந்த எண்ணெய்களை பயன்படுத்தி தீபம் ஏற்றக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இது நம்முடைய வீட்டிற்கு பெரிய கஷ்டத்தை கொண்டுவந்து சேர்த்து விடும். நம்முடைய தேவைக்காக எவ்வளவோ பணத்தை செலவழிக்கின்றோம். இறைவனுக்காக தீபம் ஏற்றுவதற்கு சுத்தமான நல்லெண்ணெய்வாங்குவதன் மூலம் நமக்கும் எந்த நஷ்டமும் வரப்போவது கிடையாது.

kamatchi-vilakku

சில பேர் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் அதே பாத்திரத்தில் உள்ள நல்லெண்ணெயை கொண்டு வந்து பூஜைக்கு தீபம் ஏற்றுவார்கள். அப்படி ஏற்றக்கக்கூடாது. சமையல் செய்வதற்கு நல்லெண்ணையை தனியாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தனியாக ஒரு பாத்திரத்தில் பூஜைக்கு நல்லெண்ணையை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எந்த எண்ணெயும் கலக்காத, எந்த கலப்படமும் இல்லாத சுத்தமான நல்லெண்ணெய் வாங்குவதில் சிரமம் பார்க்காதீர்கள். இந்த நல்லெண்ணெய் விலை குறைவாக உள்ளது, என்று ஏதாவது எண்ணையை நீங்கள் வாங்கும் போது, அந்த எண்ணெயில் மற்ற எண்ணெய்கள் கலப்படம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. நம் வீட்டுப் பூஜை அறையில், நிறைய தீபங்கள் ஏற்ற வேண்டும் என்ற அவசியமே கிடையாது. உங்களால் முடிந்த சிறிய அளவு காமாட்சி அம்மன் விளக்கு ஆக இருந்தாலும், சிறிய அளவு மண் விலங்காக இருந்தாலும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றி, இறை வழிபாடு செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

ellu

இதோடு சேர்த்து எப்போதுமே உங்கள் வீட்டு சமையல் அறையில் கொஞ்சம் கருப்பு எள்ளை கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த எள்லை பயன்படுத்தாமல் அப்படியே வைத்துவிடக்கூடாது. உங்களுடைய சமையலில் வாரத்தில் இரண்டு முறையாவது சேர்த்து சமைக்க வேண்டும். எள் கலந்து இட்லி பொடி, எள் சாதம், புளி சாதத்தில் கொஞ்சம் எள் சேர்த்துக் கொள்ளலாம், இப்படி எள் கலந்த சாப்பாட்டை நாம் சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது ஆன்மீக ரீதியாகவும் நம் குடும்பத்திற்கு நல்லது.

- Advertisement -

deepam

சனீஸ்வர பகவானால் நமக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறைந்து சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெறுவதற்கு நம் சமையல் அறையில் எள் இருப்பது நல்ல ஒரு பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கி, வீட்டில் இருக்கும் கஷ்டம் நீங்கி வீடு சுபிட்சம் அடைவதற்கு, நல்லெண்ணை தீபம் ஏற்றுவதும், சமையலறையில் கண்ணாடி பாத்திரத்தில் எள் தீர்ந்து போகாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டாலே கஷ்டத்தில் பாதி குறைந்துவிடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -