தெய்வ அருளை பெற விளக்கேற்றும் முறை

vilakku valipadu
- Advertisement -

விளக்கேற்றுவது என்பது நம் இந்துக்களின் முக்கியமான பழக்கமாகும். அன்றாடம் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இல்லங்களில் காலை மட்டுமோ அல்லது மாலை மட்டுமே ஒரு வேளை மட்டும் விளக்கேற்றி வழிபாடு செய்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ செவ்வாய், வெள்ளிக்கிழமையில் மட்டும் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். தெய்வத்தின் மீது நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட வெள்ளிக்கிழமை அன்று விளக்கேற்றி வழிபடும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இப்படி விளக்கேற்றி வழிபடுவதற்கு முன்பாக விளக்கை எந்த முறையில் வழிபட்டால் தெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தீபத்தில் முப்பெரும் தேவியரும் குடியிருக்கிறார்கள். சக்தி ரூபமாகவும், லஷ்மி ரூபமாகவும், சரஸ்வதி ரூபமாகவும் தீபம் திகழ்கிறது. ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தில் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் நாம் ஆவாகனம் செய்ய முடியும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தீபத்தை நாம் எந்த முறையில் வணங்க வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஆண்கள், பெண்கள் என்று இரு பாலரும் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். ஆண்கள் விளக்கேற்றுவதாக இருந்தால் அவர்களுக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை பின்பற்றி விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பெண்கள் விளக்கேற்றுவதாக இருந்தால் அவர்களுக்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை அவர்கள் பின்பற்றி விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக ஒரு சிறிய வழிபாட்டை செய்துவிட்டு விளக்கேற்ற அனைத்து தெய்வங்களின் அருட்பார்வையும் நம் மீது விழும்.

விளக்கேற்றுவதற்கு முன் விளக்கிற்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் பூக்களை வைக்க வேண்டும். அந்த பூக்களுக்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டு அந்த விளக்கை இரண்டு கைகளால் தொட்டு வணங்கிய பிறகு தீபம் ஏற்ற வேண்டும். பூக்கள் கிடைக்காத நேரத்தில் அரிசியை வைத்து விளக்கேற்ற வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் பூக்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய பூக்களை வைத்துக் கொள்ளலாம். அரிசியை வைப்பவர்கள் அந்த அரிசியை சமையலுக்கு உபயோகப்படுத்தி விட்டு புது அரிசியை வைக்கலாம். ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து செலவுக்காக வைத்துக்கொண்டு புதிய நாணயத்தை வைத்து விளக்கேற்ற வேண்டும். இந்த முறையில் தீபத்தை ஏற்றும் பொழுது எந்த தெய்வத்தின் பெயரை நாம் உச்சரித்து தீபம் ஏற்றுகிறோமோ அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது குலதெய்வத்தின் பெயரை உச்சரித்த வண்ணம் தீபம் ஏற்ற வேண்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்தின் பெயரைக் கூறி தீபம் ஏற்ற வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் குடியேறுவார்கள் என்று பொருள்படும்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகள் தீர வெற்றிலை பரிகாரம்

இந்த வழிபாட்டை மேற்கொண்டு விட்டு தெய்வத்தின் பெயரை உச்சரித்து தீபம் ஏற்றும் பொழுது அந்த தெய்வம் மன மகிழ்ச்சியுடன் வந்து அந்த தீபத்தில் அமர்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும்.

- Advertisement -