முருகனின் பூஜை பொருட்கள் பல லட்சம் வரை ஏலம் – எடுத்தால் அதிஷ்டம் நிச்சயம் – வீடியோ

murugan

நம் “பாரத தேசம்” ஆன்மிகத்தில் மிகவும் முன்னேறிய ஒரு நாடு. இந்த சிறப்பான நாட்டில் வாழும் மக்கள் உடல் மற்றும் மனநலத்தோடு இருப்பதற்காக “விஞ்ஞானம்”மற்றும் “மெய்ஞ்ஞான” அறிவோடு நாடு முழுக்கு பல்லாயிரக்கணக்கான கோவில்களை நம் முன்னோர்கள் எழுப்பினர். அத்தகைய கோவில்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு வகையான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அப்படி ஒரு கோவிலில் நடக்கும் வித்யாசமான நடைமுறையைப் பற்றிய இக்காணொளியை இங்கு காண்போம்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள, தேவகோட்டையில் உள்ள ஒரு முருகன் கோவிலில் “தங்கத்தாலும், ரத்தினக்கற்களும்” பதிக்கப்பட்ட “முருகனின் வேல் ஒன்று வருடத்திற்க்கு ஒருமுறை சிறப்பான பூஜைகள் செய்து வழிபடப்படுகிறது. அப்போது அந்த “வேலை” வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நடக்கும் என்றும், அப்படி பலருக்கு அம்முருகன் வேலின் அருளால், அவர்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதாக இக்கோவிலின் பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஒருமுறை இந்த வேல் சிறிது சிதிலமடைந்த போது, அதை சரி செய்து தர பல பேர் போட்டியிட்டாகவும், ஆனால் அந்த வேலை இக்கோவிலுக்கு அளித்த அக்குடும்பத்தினரே இவ்வேலை சரிசெய்ய வேண்டும் என்றும், அந்த குடும்பத்தினரின் பொருளாதார நிலை உயர்ந்த பின்பு இதை செய்ய வேண்டும் என்று “தெய்வ வாக்கு” கூறப்பட்டதாகவும், அதன் படியே தாங்கள் அப்புனித காரியத்தை செய்ததாகவும் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.

இக்கோவிலில் முருகப்பெருமானின் வேலையே, முருகப்பெருமானாக அலங்கரித்து 50 கும் அதிகமான பூஜைப் பொருட்களைக் கொண்டு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்பூஜைகள் முடிந்த பின் அந்த வேலை தொட்டுக்கொண்டிருந்த பூக்கள், புடவைகள் போன்ற பூஜைப்பொருட்கள் ஏலம் விடுப்படுகிறது. அந்த ஏலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பங்குபெற முடியும் என்றும், அப்போது அந்த பூஜைப்பொருட்கள் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை ஏலம் எடுக்கப்படும் என்று இங்குள்ளோர் கூறுகிறார்கள்.

இவ்வாறு ஏலம் எடுத்த பொருட்களை தாங்கள் வைத்திருக்கும் போது அம்முருகனின் அருளினால் தாங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நடந்ததாக அவ்வனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள். வினை தீர்ப்பான் வேலவன் என்பது இங்கே நிரூபிக்கப்படுகிறது