மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி வரங்களை வாரி வழங்கிக் கொண்டே இருப்பாள். இந்த 3 பொருட்களை தாம்பூலத் தட்டில் இப்படி வைத்து பூஜை செய்தால்.

நாம் அனைவருமே மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றுதான் தினந்தோறும் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம்மீது விழுந்து விட்டால் போதுமே. வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் அனைத்தும் காணாமல் போய்விடும். மகாலட்சுமியை நம் வசப்படுத்திக் கொள்ள, வீட்டில் தன ஆகர்ஷனத்தை ஏற்படுத்த சுலபமான முறையில் எந்த மந்திரத்தை சொல்லி, எப்படி பூஜை செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalashmi3

இந்த பூஜையை செய்தால் மகாலட்சுமி உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக தங்கி விடுவாள். உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அந்த மகாலட்சுமிக்கு மனசே வராது என்று கூட சொல்லலாம். சரி அந்த பூஜை எப்படிசெய்வது நாமும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

வழக்கமாக மகாலட்சுமி பூஜை என்றால் வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்குவார்கள். ஆனால் இந்த பூஜையின் நீங்கள் ஒரு முகூர்த்த நாளாக பார்த்து உங்களுடைய வீட்டில் தொடங்கிக் கொள்ளலாம். அது உங்களுடைய சவுகரியம் தான். எப்போதும் போல பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மகாலட்சுமி படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய தாம்பூலத் தட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் 11, ஒரு ரூபாய் நாணயங்கள், ஒரு எலுமிச்சம்பழம் ஒரு சிறிய டம்ளரில் கொஞ்சமாகத் தண்ணீர், பன்னீர் ஒரு சொட்டு நெய் கலந்து வைத்துவிட வேண்டும்.

one rupee

இந்த தட்டில் உதிரி புஷ்பங்களை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அந்த பூக்கள் மல்லிகை பூக்கள் ஆக இருப்பது மிக மிக நல்லது. தாம்புல தட்டில் கட்டாயமாக பதினோரு 1 ரூபாய் நாணயம், ஒரு எலுமிச்சம்பழம் டம்ளரில் மேலே சொன்ன பொருட்கள் கலந்த தண்ணீர் இந்த மூன்று பொருட்கள் இருக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களை தவிர்த்து உங்களுடைய வீட்டில் தங்க நாணயம் வெள்ளி நாணயம், அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு கம்மல் மோதிரம் இருந்தாலும் அதை தண்ணீரில் அலம்பி விட்டு அந்தத் தட்டில் வைக்கலாம்.

- Advertisement -

இந்த பொருட்களெல்லாம் அப்படியே பிரதிபலிக்கும் படி தட்டின் முன்னால் ஒரு கண்ணாடியை எடுத்து வைத்துவிடுங்கள். இப்போது நாம் பின்வரும் மந்திரத்தை உச்சரித்து மகாலட்சுமியை மனதார வேண்டி பூஜை செய்ய வேண்டும். பின் வரக்கூடிய மந்திரத்தை வெறும் ஒரு முறை உச்சரித்தாலே போதும். மந்திரத்தை உச்சரிக்கும் போது உதிரி புஷ்பங்களை மகாலட்சுமிக்கு பூஜை செய்யுங்கள்.

mallipoo

ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிளியும் சவ்வும்
சந்த்ரலட்சுமியே நமஹா!
கரம் கிரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே  நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!

தெய்வ வஷ்ய, பூத வஷ்ய, லோக வஷ்ய, ராஜ வஷ்ய,
ஜன வஷ்ய, புருஷ வஷ்ய, ஸ்த்ரி வஷ்ய,  புத்திர சம்பத் வஷ்ய,
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல்
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!

poojai

இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களும் காணாமல் போக மகாலட்சுமியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். அந்த எலுமிச்சம் பழத்தை பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடலாம். அப்படி இல்லை என்றால் சாறு பிழிந்து குடிப்பதும் நல்லது. இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதன் பின்பு வாரம் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்து வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்வது நம் வீட்டிற்கு பலவகையான நன்மையை தேடித்தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.