சகல சௌபாக்கியமும் பெற, தனலக்ஷ்மி நம் வீட்டிலேயே நிலைத்திருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

lakshmi-mantra

முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தனலக்ஷ்மி நம் வீட்டிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்றாலும், மகாலக்ஷ்மியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றாலும், முதலில் நாம் வழிபட வேண்டியது சரஸ்வதி தேவியை தான். எதற்காக சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்? என்ற காரணத்தையும், தனலக்ஷ்மி நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் நாம் எந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

saraswathi11

சகல சௌபாக்கியம் என்பது முதலில் எதைக் குறிக்கின்றது? என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். ‘ச’ என்பது சரஸ்வதியையும், ‘க’ என்பது கணபதியையும், ‘ல’ என்பது லட்சுமியையும் குறிப்பதாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எவர் ஒருவர் நாவில், சரஸ்வதி நிரந்தரமாக குடி கொண்டு விட்டாலோ, அந்த நாக்கு கட்டாயம் கடுஞ் சொற்களையும், கெட்ட வார்த்தைகளையும், பேசாது. இப்படி இருக்கும் பட்சத்தில் லட்சுமிதேவி தானாக நம் வீட்டுக்குள் நுழைவாள் என்பதில் சந்தேகமே இல்லை.

சாஸ்திரங்களின் நூல் குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ள மந்திரம் இது. அந்த காலத்தில் இருந்தே ராஜாக்கள், தனக்ஷ்மியை தங்கள் வசம் படுத்திக் கொள்வதற்காக உபயோகப்படுத்திய மந்திரம் என்றும் சில நூல் குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இந்த மந்திரத்தை வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று உச்சரிப்பது மிகவும் நல்லது.

dhanalakshmi

முடிந்தவர்கள், தினம்தோறும் 21 முறை உச்சரிக்கலாம். 21 முறை உச்சரிக்க முடியாதவர்களாக இருந்தால், தினம் தோறும் மூன்று முறையாவது உச்சரித்து வாருங்கள். கட்டாயம் இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கும் நாள், வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும்.

- Advertisement -

காலையில் எழுந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த பூக்களைச் சூட்டி, சரஸ்வதி தேவிக்கு அலங்காரம் செய்து, கணபதியை முதலில் வழிபட்டுவிட்டு அதன் பின்பு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான லக்ஷ்மி கலாச்சியத்தை தேடித்தர போகும் அந்த மந்திரம் இதோ!

vinayagar

‘ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோ வயம்
வைச் ’ரவணாய குர்மஹேஸமே காமான் காம காமாய
மஹ்யம் காமேச்’வரோ வைச்ரவணோ ததாது குபேராய
வைச் ’ரவணாய மஹாராஜாய நம’

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கட்டாயம் வீட்டில் சண்டை போடக்கூடாது. அதாவது உங்கள் வாயால், உங்கள் வீட்டில் இருப்பவர்களை கண்டபடி திட்டக்கூடாது. வீட்டில் அமைதி நிலைத்திருக்க வேண்டும். உங்கள் நாவில் சரஸ்வதி குடிகொள்ள வேண்டும் அப்போது தான் உங்கள் வீட்டில் லட்சுமி நிலைத்திருப்பாள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தடைபட்டு கொண்டிருக்கும் திருமண யோகம் விரைவில் பெற, இந்த எளிய மந்திரத்தை தினமும் உச்சரித்தாலே போதும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Dhanalakshmi mantra in Tamil. Dhanalakshmi mantram. Dhanalakshmi mantram Tamil. Sri dhanalakshmi mantram. Dhana lakshmi mantra.