எந்த உயிரினத்திற்கு? எந்த நேரத்தில்? என்ன தானம் செய்தால்! இந்த பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?

bairavar-cow
- Advertisement -

ஒவ்வொரு தானம் நாம் செய்யும் பொழுதும் ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அப்படி நாம் செய்யும் தானங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்கும் தனமானது உயரியது என்கிறது சாஸ்திரம். வாயில்லா ஜீவன்களை வதைத்து கொடுமை படுத்துபவர்களுக்கு நரகத்தில் கொடூரமான தண்டனைகள் எல்லாம் கிடைக்கும் என்கிறது கருட புராணம். அது போல வாயில்லா ஜீவன்களுக்கு நாம் கொடுக்கும் நன்மைகளும் மிகுந்த புண்ணியத்தை சேர்த்து அதீத பலன்களை கொடுக்கும்! அதைப் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

annadhanam 1

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். பசித்த உயிர்களுக்கு உணவு கொடுக்கும் எவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்கள் ஏற்படாது என்பது நியதி. தெரிந்தோ தெரியாமலோ பசித்த உயிர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்தால் நீங்கள் செய்த புண்ணியம் பன்மடங்கு பெருகும். இதனால் தான் பாவங்களை செய்து விட்டு அன்னதானம் செய்து செய்த புண்ணியங்களை பன்மடங்காக பெருக்கி கொள்கிறார்கள். இதனால் பாவங்கள் கழிக்கப்பட்டு அவர்கள் பாவம் செய்திருந்தாலும் நன்றாக வாழ்வது போல நமக்கு வெளியில் தெரிகிறது.

- Advertisement -

அத்தகைய அன்னதானத்தை குறிப்பிட்ட இந்த நேரத்தில் இந்த உயிர்களுக்கு கொடுக்கும் பொழுது கஷ்டங்களும், துன்பங்களும் ஏற்படாது. குறிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு புண்ணிய காரியங்களை செய்யும் பொழுது செய்யும் புண்ணியம் இரட்டிப்பாகும். அதிகாலை இப்படி எழுந்து புறா, கிளி போன்ற பறவை இனங்களுக்கு கம்பு, கேழ்வரகு, திணை, அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தானம் கொடுத்து கூடவே தண்ணீரையும் வைத்தால் உங்களை வாழ்க்கையில் யாராலும் தோற்கடிக்க முடியாது. நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறி வெற்றியைப் பெறுவீர்கள்.

banana-for-cow

அதற்கு அடுத்தாற்போல பகல் 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக பசுக்களுக்கு வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை போன்றவற்றை தானம் கொடுப்பது சிறந்த பலன்களை தரும். அமாவாசையில் மற்றும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் திதி ஆகிய தினங்களில் இப்படி செய்ய இன்னும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். நம் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற இந்த நேரத்தில் பசுக்களுக்கு தானம் செய்து பாருங்கள். ஒவ்வொரு அமாவாசையிலும் இவ்வாறு செய்ய வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் எதுவும் உண்டாகாது. குடும்பத்தில் ஒற்றுமையும், மன மகிழ்வுடனும் இருக்க முடியும்.

- Advertisement -

பகல் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள்ளாக காகத்திற்கு அன்னம் வைப்பது குடும்பத்தில் சுபிட்சமும், இல்லத்தில் செல்வ வளமும் அதிகரிக்கும். அமாவாசை பித்ரு பூஜைகளை மட்டுமல்ல எல்லா தினங்களிலும் இவ்வாறு காகத்திற்கு உணவு படைத்துவிட்டு பின் மதிய உணவை நீங்கள் எடுத்துக் கொண்டால் நிச்சயம் செல்வமானது மென்மேலும் பெருகும். எள் கலந்த உணவு வைக்கும் பொழுது இலைகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

crow feeding

வீட்டில் இருக்கும் எச்சில் படுத்தப்பட்ட தட்டை எப்பொழுதும் பயன்படுத்தாதீர்கள். எந்த வேலையாக இருந்தாலும் மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட நிலையில் காகத்திற்கு உணவு வைக்க நல்லது நடக்கும். மேலும் இரவில் 9 மணியிலிருந்து 10 மணிக்குள்ளாக பைரவரின் அம்சமாக விளங்கும் நாய்களுக்கு உணவு தானம் செய்தால் எத்தகைய பிரச்சினைகளும் எளிதாக நீங்கும். பழையவர்கள் தொல்லை ஒழிந்தது தீராத பிணிகளும் நீங்கும்.

- Advertisement -