வீட்டில் இருக்கும் அதிர்ஷ்டத்தை கெடுத்துவிடும் இந்த 7 தானங்களை யாருக்கும் தவறியும் செய்து விடாதீர்கள்!

வீட்டிலிருக்கும் அதிர்ஷ்டத்தை கூட கெடுத்து விடும் இந்த தானத்தை யாருக்கும் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள். தானம் என்பது பொதுவாக புண்ணியத்தை சேர்க்க கூடிய ஒரு செயலாகும். அதை நாம் யாருக்கு கொடுக்கிறோம்? எதை கொடுக்கிறோம்? என்பதை பொறுத்து தான் துரதிஷ்டம் ஆகவும், அதிர்ஷ்டமாகவும் மாறுகிறது. அந்த வகையில் இந்த சில பொருட்களை தானமாக நாம் கொடுப்பதன் மூலம் நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டத்தையும் இழந்து விடுகிறோம். அப்படியான தானங்கள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

thanam

பொதுவாக நாம் செய்யக்கூடிய தானங்கள், நமது வாழ்க்கையை மட்டுமல்ல, நமக்கு பிறகு வரும் நம்முடைய சந்ததிகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. பெற்றோர்கள் செய்த புண்ணியம் எப்படி பிள்ளைகளுக்கு வருகிறது? என்பதற்கு தானம் செய்தலும் ஒரு சிறந்த உதாரணமாகும். பெற்றோர்கள் செய்த புண்ணிய தானம், உங்கள் பிள்ளைகளையும் சேர்கிறது. இதனால் அவர்களுடைய வாழ்க்கையும் வளமாக மாறுகிறது. பழைய கெட்டு போன சாப்பாட்டை தானமாக தெரியாமல் கூட எவருக்கும் கொடுக்க கூடாது. இவ்வாறு செய்வது தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

‘தனக்கு போகத்தான், தானமும் தர்மமும்’ என்பது பழமொழி. தானம் செய்வதாக இருந்தாலும், தர்மம் செய்வதாக இருந்தாலும் உங்களுக்கு தேவையானவற்றை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக சிலர் நமக்கு தேவையில்லாத விஷயங்கள் என மற்றவர்களுக்கு தானமாக வாரி வழங்கி விடுகின்றனர். ஆனால் அப்படி செய்யப்படும் தானங்களில் சில விஷயங்கள் அதிர்ஷ்டத்தை கெடுக்கக் கூடியதாக இருக்கும்.

plastic-boxes

நம் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒரு பொழுதும் தானம் கொடுக்க கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை தானம் கொடுப்பதன் மூலம் துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறோம். பழைய துடைப்பான்கள் ஒரு சிலருடைய வீட்டில் புதிதாக வீட்டை மாற்றும் பொழுது விட்டு விட்டு சென்று விடுவார்கள். அதை இன்னொருவர் எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது. பழைய துடைப்பத்தை தானம் செய்வதும், தெரியாமல் விட்டு விட்டு வருவதும் அதிர்ஷ்டத்தை போக்க வல்லது ஆகும். நம் வீட்டில் துடைப்பான்கள் தேய்ந்து விட்டால் அதனை எரித்து விடுவது மிகவும் நல்லது. அதை மற்றவர்கள் பயன்படுத்தும் பொழுது நம்முடைய அதிர்ஷ்டம் அவர்களுக்கு சென்று விடுகிறது.

- Advertisement -

கூர்மையான பொருட்களை ஒரு பொழுதும் தானம் செய்யக்கூடாது. அதாவது கத்தி, ஊசி, கடப்பாறை, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான ஆயுதங்களை தானம் செய்வது என்பது அதிர்ஷ்டத்தை போக்கக் கூடியது ஆகும். இது போன்ற பொருட்களை தவறியும் நம் வீட்டிலிருந்து வெளியில் செல்லக்கூடாது. கடனாக வாங்கி விட்டு திருப்பி தருவது பிரச்சினையில்லை! ஆனால் அவர்களே அதை வைத்துக் கொண்டால் அது தானமாக ஆகிவிடுகிறது. இப்படி நம்மிடம் இருந்து அவர்களுக்கு செல்லும் இந்த பொருட்கள் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்குமே தவிர, நமது அதிர்ஷ்டத்தை அது போக்கிவிடும்.

vilakku

வீட்டில் எரிந்து கொண்டிருந்த பித்தளை, வெள்ளி விளக்குகள் எந்த காரணம் கொண்டும் நம்மை தவிர மற்றவர்களிடம் செல்லக் கூடாது. இவற்றை களவு கொடுப்பதும், தானம் கொடுப்பதும் நமக்கு வர இருக்கும் அதிர்ஷ்டத்தை போக்க வல்லது. சிலருடைய வீட்டில் வெள்ளிப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள் திருடு போவது உண்டு. இதுபோல் விளக்குகள் திருடப்படும் பொழுது நமக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டம் நம்மை விட்டு நீங்கி விடுவதாக கூறப்படுகிறது.

gold

அது மட்டுமல்லாமல் தங்கம் தோஷத்தை கொடுக்கக் கூடியது என்பதால் நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை ஒரு பொழுதும் தானமாக கொடுக்காதீர்கள். கடனாக கொடுக்கப்படும் தங்க நகைகள் மீண்டும் உங்களிடம் வரும் பொழுது தோஷத்தை நீக்க மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு அணிந்து கொள்ளுங்கள். பழைய கிழந்த துணிகளை தானம் கொடுக்கக் கூடாது. உங்களுக்கு பயன்படாத துணிகளை தான் தானம் செய்ய வேண்டும். கிழிந்து நைந்து போன துணிகளை தானம் கொடுத்தால் அது அதிர்ஷ்டத்தை போக்கும்.