தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட இவற்றை செய்தால் போதும்

dhanusu

மிருகங்களிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவது மனிதனின் சுயசிந்தனை அறிவாகும். அந்த மனித இனத்திலும் ஒரு சில மனிதர்களை தனித்து காட்டுவது அவர்கள் அடையும் மிக உயர்வான நிலையான ஞான நிலை. ஒரு மனிதனுக்கு ஞானத்தை அருளச்செய்வதில் முக்கிய பங்காற்றுகிறார் சுபகிரகமான குரு பகவான். அந்த குரு பகவானுக்குரிய ஒரு ராசி தான் தனுசு ராசி. இந்த தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகுதியான செல்வமும், யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெறுவதற்கு செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.

guru bagwan

12 ராசிகளில் ஒன்பதாவது ராசியாக வருவது தனுசு ராசி ஆகும். தனுசு ராசியை ஆளும் நவகிரக நாயகனாக முழு சுப கிரகமான குரு பகவான் இருக்கிறார். ஒரு மனிதனுக்கு பொன் சேர்க்கை, புத்திரப்பேறு, ஞானம் ஆகியவை ஏற்பட குருபகவானின் கடாட்சம் அவசியமாகிறது. அந்த வகையில் தனுசு ராசியினர் தங்களின் வாழ்வில் மேன்மையான பலன்களைப் பெற கீழ்க்கண்ட பரிகாரங்களை திடசித்தத்தோடு செய்து வருவதால் நன்மைகள் உண்டாகும்.

வருடத்திற்கொருமுறை குரு பகவான் தலமான திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிழமைகள் தோறும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற கொண்டக்கடலை மாலை சாற்றி, பசு நெய் தீபமேற்றி வழிபட்டு வருவதால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படுவதை அனுபவ ரீதியில் காணலாம். தினமும் காலையில் உங்கள் வீட்டிலிருந்து வெளியில் புறப்படுவதற்கு முன்பாக தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து வழிபட்டு செல்வதால் தீமைகள் விலகி நன்மைகள் ஏற்படும்.

guru-bagawan

புதிய முயற்சிகள் பணம் சம்பந்தமான விடயங்களை மாதத்தில் வருகின்ற 3, 12, 21 ஆகிய தேதிகளில் மேற்கொள்வது உங்களுக்கு சாதகமான நிலையை உண்டாக்கும். உங்களால் முடிந்த போது துறவிகளுக்கு மஞ்சள் நிற வஸ்திரத்தை தானம் செய்வது குரு பகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும். தரமான புஷ்பராகக் கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து, ஒரு வளர்பிறை வியாழக்கிழமை தினத்தன்று உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது அதிர்ஷ்டங்களை அதிகம் ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
திருமண தடை நீங்க, சொந்த வீடு அமைய இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dhanusu rasi tips in Tamil. It is also called as Dhanusu rasi pariharam in Tamil or Jothida rasi pariharam in Tamil or Rasi pariharam in Tamil or Dhanusu rasi in Tamil.