- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநோய் நொடிகளில் இருந்து விடுபட தன்வந்திரி மந்திரம்

நோய் நொடிகளில் இருந்து விடுபட தன்வந்திரி மந்திரம்

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குறைவில்லாத செல்வத்தை தேடி தேடி ஓடி, நோயை வர வைத்துக் கொள்ளும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். நோயில்லாத மனிதர்களே இந்த பூலோகத்தில் இல்லை. மருந்து மாத்திரை சாப்பிடாத மனிதர்களே இந்த பூலோகத்தில் இல்லை என்ற சூழ்நிலை வந்துவிட்டது.

இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி. நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, சந்தோஷம் ஆன வாழ்க்கை, இவை அனைத்தும் ஒரு மனிதனுக்கு சேர்ந்து இருந்தால், நிச்சயமாக இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் கலப்படம் இல்லாத சாப்பாடு, நல்ல தூக்கமோ ஓய்வு இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது.

- Advertisement -

சரி, இந்த பிரச்சனையை எல்லாம் விட்டு விடுவோம். இந்த பிரச்சனைக்கு தீர்வு தர வேண்டும் என்று இறைவனிடம் சரணாகதி அடைவோம். தீராத நோய்நொடி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், ஆன்மீகம் ரீதியாக நாம் செய்ய வேண்டிய வழிபாடு இந்த தன்வந்திரி வழிபாடு.

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு 3 கற்பூர  வில்லைகளை எடுத்து, உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண கற்பூரம் தான். இறைவனுக்கு சூடம் ஏற்றுவோம் அல்லவா. அந்த கற்பூரத்தை வைத்தே, இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இரவு தூங்குவதற்கு முன்பு, கற்பூரத்தை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, தன்வந்திரி பகவான் மந்திரத்தை 3 முறை படித்துவிட்டு, கையில் இருக்கும் அந்த கற்பூரத்தை அப்படியே தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். நீங்கள் தூங்கும் போது அந்த கற்பூரம் ஆவியாகி கொஞ்சம் கொஞ்சமாக கரையும் அல்லவா. அப்போது உங்களுடைய நோய்நொடி பிரச்சனைகளையும் கண்ணுக்கு தெரியாமல் கரைந்து போகும் என்பது நம்பிக்கை.

ஒரு நாள் பயன்படுத்திய கற்பூரம் 15 நாள் வரை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கரையும். அதுவரை நீங்கள் அதே கற்பூரத்தை பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். இரவு தூங்க செல்லும் போது தினமும் கற்பூரத்தை வைத்து இந்த தன்வந்திரி மந்திரத்தை சொல்ல வேண்டும். கற்பூரம் ரொம்பவும் கரைந்து போய் மிகவும் சின்னதாக மாறிவிட்டால், கற்பூரம் தன் வாசனையை முழுமையாக இழந்து விட்ட பிறகு, அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புது கற்பூரத்தை கையில் வைத்து இந்த மந்திரத்தை சொல்ல துவங்குங்கள்.

- Advertisement -

நோய் நொடிகள் விலக தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய மகா விஷ்ணவே நமஹா.

எந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சினைக்கும், நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெரிய அளவில் இருக்கும் பிரச்சனைகள் கூட படிப்படியாக குறைவதை உணருவீர்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உங்களுடைய பிள்ளைகளுடைய கையில் கற்பூரத்தை கொடுத்து, மந்திரத்தை அம்மாவோ அப்பாவோ, மூன்று முறை சொல்லுங்கள். அது அவர்களுடைய காதில் விழும்.

இதையும் படிக்கலாமே: கடுமையான பண நெருக்கடியில் இருந்து விடுபட பரிகாரம்

பிறகு அந்த கற்பூரத்தை அவர்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வையுங்கள். நிச்சயமாக உங்களுடைய பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும் முன்னேற்றம் கிடைக்கும். ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த நோய்நொடி பிரச்சனைக்கு தீர்வை அந்த தன்வந்திரி பகவான் நிச்சயம் காண்பித்துக் கொடுப்பார். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தைப் பின்பற்றி பலன் அடையுங்கள்.

சற்று முன்