- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றிகள் குவிய தீப தியானம் செய்யும் முறை

வெற்றிகள் குவிய தீப தியானம் செய்யும் முறை

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான காரியங்களில் ஈடுபடுகிறோம். அவ்வாறு ஈடுபடும் பொழுது அந்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்ற ஆசையில்தான் ஈடுபடுவோம். இருப்பினும் பலராலும் அவர்கள் செய்யக்கூடிய காரியங்களில் வெற்றிகளை பெறாமல் தோல்வியடைந்து அதனால் மன வேதனைக்கு உள்ளார்கள். அப்படிப்பட்டவர்களை சரியான முறையில் அந்த காரியத்தை வழிநடத்திச் செல்வதற்கு உதவக்கூடிய ஒரு தீப தியானத்தைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வெற்றிகள் குவிய தீபம்

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் முழு கவனத்துடன் செய்யும்பொழுது தான் அந்த காரியம் வெற்றி அடையும். அப்படி முழு கவனத்துடன் நாம் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய மனமும் அறிவும் ஒரு சேர செயல்பட வேண்டும். இப்படி மனமும் அறிவும் ஒருசேர செயல்படுவதற்கு உதவக் கூடியதாக தான் தியானம் திகழ்கிறது. இந்த தியானத்தை எந்த முறையில் எந்த நேரத்தில் எப்படி செய்தால் பிரபஞ்ச பேராற்றலுடன் இணைந்து வெற்றிகளை குவிக்க முடியும் என்று தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த உலகத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் பலரும் கூறக்கூடிய அதி முக்கியமான நேரமாக திகழ்வதுதான் பிரம்ம முகூர்த்த நேரம். யார் ஒருவர் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தங்களுடைய அன்றாட காரியங்களை செய்கிறார்களோ அவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூட கூறலாம். இது ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் உண்மை என நிரூபிக்கப்பட்ட ஒன்று. அப்படிப்பட்ட பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும். அதாவது 4:30 மணியிலிருந்து 5 மணிக்குள் எழுந்து அந்த நேரத்திற்குள் இந்த தியானத்தை நாம் செய்ய வேண்டும்.

அவ்வாறு எழுந்தவுடன் குளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. முகம் கை கால்களை மட்டும் கழுவிக் கொண்டால் போதும். இந்த தியானத்தை பூஜை அறையில் செய்ய வேண்டியது இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த தியானத்தை செய்யலாம். வீட்டில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். நிமிர்ந்து அமர்ந்து கொள்வது போல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கண்களுக்கு நேராக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். அதற்கேற்றால் போல் ஒரு நாற்காலியை வைத்து அதில் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றங்கள். இந்த தீபத்தில் ஒரு சிட்டிகை அளவு ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்பொழுது இந்த தீபத்தை கண்ணிமைக்காமல் மூன்று நிமிடம் பார்க்க வேண்டும். அவ்வாறு மூன்று நிமிடம் பார்க்கும் பொழுது “பிரபஞ்ச பேராற்றலுடன் இணைய வேண்டும் பிரபஞ்ச பேராற்றலின் சக்தியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்” என்று மனதிற்குள் கூறிக் கொண்டே அந்த தீபத்தை பார்க்க வேண்டும். இப்படி பார்ப்பதன் மூலம் பிரபஞ்ச பேராற்றல் சக்தியை நம்மால் எளிதில் பெற முடியும்.

மூன்று நிமிடம் பார்த்து முடித்த பிறகு தீபத்தை குளிர வைத்துவிட்டு உங்களுடைய வலது கையில் இருக்கக்கூடிய ஆள்காட்டி விரலால் இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கக்கூடிய சூட்சுமமான புள்ளியை 10 முறை தொட வேண்டும். இவ்வாறு தொடுவதன் மூலம் அந்த புள்ளி இயக்கப்பட்டு நம்முடைய உடலுக்கும் மனதிற்கும் அறிவிற்கும் சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் தெளிவான முடிவை எடுக்க முடியும்.

இதையும் படிக்கலாமே: முன் ஜென்ம பாவங்களை நீக்கும் பால் அபிஷேகம்

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மனதையும் அறிவையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிலைப்படுத்தக் கூடிய இந்த தீப தியாணத்தை முழு நம்பிக்கையோடு செய்து அனைத்து காரியங்களிலும் வெற்றியை குவிக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்