இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றினால், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்தி அடித்து வெளியே விரட்டப்படும். தெய்வ சக்தி வீட்டை தேடி ஓடோடி வந்து விடும்.

amman1

வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை வெளியேற்றுவதற்கு, பல வகையான பரிகாரங்கள் நமக்குச் சொல்லப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் மிகவும் எளிமையான முறையில் ஒரு பரிகாரத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன் மூலம் ஒரு யாகம் நடத்திய பலனை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த புகை உங்கள் வீடு முழுவதும் பரவினால் வீட்டின் மூலை முடுக்குகளில் இருந்து கெட்ட  சக்தி வீட்டிலிருந்து இழுத்துக்கொண்டு வந்து வெளியே தள்ளப்படும். உங்கள் வீட்டிற்குள் வர முடியாமல், வெளியில் காத்துக் கொண்டிருக்கும் தெய்வ சக்தியும், உங்கள் வீட்டிற்குள் தானாக நுழைந்து விடும்.

el deepam

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு தேவையான பொருளை நம் வீட்டில் தான் தயார் செய்யப் போகின்றோம். அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். கொப்பரை தேங்காய் ஒன்று, வெட்டிவேர் சிறிதளவு, ஜவ்வாது பொடி சிறிதளவு, பச்சை கற்பூரம் 2 துண்டு, ஏலக்காய் 5, முதலில் கொப்பரைத் தேங்காயை பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் வெட்டிய கொப்பரை தேங்காயை சேர்த்து, அதோடு வெட்டிவேர், ஜவ்வாது பொடி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய், இந்த பொருட்களையும் கொப்பரை தேங்காயோடு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இது மொத்தமாக நைசாக அரைபடாது. கொஞ்சம் கொறகொறப்பான பக்குவத்தில் தான் நமக்கு கிடைக்கும்.

kopparai-thengai

நாம் தயார் செய்த வாசனை மிகுந்த இந்த கலவையை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்றும் செவ்வாய்க் கிழமை அன்றும் தூபம் போடும் போது அந்த நெருப்பில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் நெய்யையும் அந்த தூபத்தில் சேர்த்து வரக்கூடிய புகையை வீடு முழுவதும் காண்பிக்கலாம். இப்படியும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

அப்படி இல்லை என்றால், ஒரு சிறிய வெள்ளை காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை ஒரு ஸ்பூன் வைத்து, சிறிய முடிச்சாக கட்டிக்கொள்ளுங்கள். ஒரு மண் அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, இந்த முடிச்சை அந்த எண்ணெயில் நன்றாக நனைத்து, முடிச்சை பற்றவைத்து விட்டாலும் அந்த முடிச்சு யாகம் போல் உங்கள் வீட்டில் எரியும். இந்த யாக தீபத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி அனைத்தும் பலியாகி விடும். யாகம் நடத்தினால் நம் வீட்டிற்கு எவ்வளவு நேர்மறை ஆற்றல் கிடைக்குமா, அதே அளவு ஒரு நன்மையை நமக்கு இந்த யாக தீபம் கொடுக்கும்.

dhupam

இந்த வாசத்திற்கு வீட்டில் கெட்ட சக்தி தாங்கவே முடியாது. உங்களுடைய வீட்டில் தெய்வ சக்தி விரும்பி வந்து குடிகொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வீட்டில் வரக்கூடிய தேவையற்ற சண்டை சச்சரவுகளும் குறையும். வீட்டில் இருந்தாலே மன நிம்மதி இல்லை என்று சொல்லுபவர்களுக்கு இந்த முறை மிகவும் நல்ல பலனை கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.