தெய்வம் உங்கள் வீட்டிற்குள் இந்த நேரத்தில்தான் வரும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டு வாசல் கதவை அடைத்து வைக்காதீங்க!

- Advertisement -

தெய்வம் நினைத்தால் நம்முடைய வீட்டிற்குள் எந்த நேரத்திலும் வரலாம். எந்த வழியிலும் வரலாம். இந்த நேரத்தில் தான் தெய்வம் வீட்டிற்குள் வரவேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. அப்படி ஒரு கட்டுப்பாட்டை தெய்வத்திற்கு நம்மால் விதிக்கவும் முடியாது. இதேபோல் நிலைவாசல் வழியாக நம் வீட்டிற்குள் தெய்வங்கள் நுழையும் என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று. ஆனால் நம் வீட்டிற்குள் வரக்கூடிய காற்றின் மூலமாகவும், ஜன்னல் வழியின் மூலமாக கூட நம் வீட்டிற்குள் அந்த தெய்வ சக்தி நுழையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருப்பினும் அந்த காலத்தில், நம்முடைய முன்னோர்கள் தெய்வம் வீட்டிற்கு வரக் கூடிய நேரங்கள் இவை, இந்த நேரத்தில் நிலை வாசல் கதவை திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். அது எந்த நேரம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்லப்படும் அதிகாலை வேளையில் தெய்வங்கள் பூலோகத்திற்கு வருகை தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் சூரிய உதயத்திற்கு முன்பாக நிலை வாசலை கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டு, வாசலில் தீபம் ஏற்றி வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உடனே நிலை வாசல் கதவை அடைத்து விட்டு வீட்டிற்குள் வரக்கூடாது.

- Advertisement -

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு வீட்டு வாசலில் கோலம் போட்ட பின்பு, அந்த நேரத்தில் நம் வீட்டிற்குள் மகாலட்சுமியும் மற்ற தேவதைகளும் வருகை தருவார்கள் என்ற ஒரு கருத்து உண்டு. கோலம் போட்டபிறகு கொஞ்ச நேரமாவது உங்களுடைய நிலை வாசல் கதவை திறந்து வைக்க வேண்டும்.

nila-vasal

காலையில் உங்களுடைய வீட்டிற்குள் சூரிய உதயமாகும் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் வீட்டிற்குள் வரும் படியான சூழல் இருந்தால், அதாவது ஜன்னலின் வழியாக சூரிய உதயம் வீட்டிற்குள் வந்தால் அதுவும் தெய்வம் வீட்டிற்குள் வருவதாகத் தான் அர்த்தம். ஸ்க்ரீன் போட்டு சூரியனின் கதிர்களை வீட்டுக்குள் வரவிடாமல் மறைக்காதீங்க. ஜன்னலையும் அடைக்காதீர்கள்.

- Advertisement -

இதேபோல் மாலை நேரத்தில் விளக்கு வைத்த பின்பு நிலை வாசல் கதவை அடைத்து வைக்கக் கூடாது. கட்டாயம் நிலை வாசல் கதவை திறந்து தான் வைக்க வேண்டும். இதேபோல் இரவு நேரங்களிலும் தெய்வங்கள் நம்மைக் காக்கவும் நம் ஊரை காக்கவும் ஊருக்குள் உலா வரும் என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது.

vasal-kathavu-kuladheivam

அதாவது சில கிராமங்களில் சொல்லுவார்கள். இரவு நடு ஜாமத்தில் வெளியில் செல்லக்கூடாது. அம்மன் தெய்வம் காவல் தெய்வம் ஊருக்குள் வரும். அந்த சமயத்தில் எதிர் படக்கூடாது என்று சொல்லியும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இதை சில மனிதர்கள் உணர்ந்தும் இருப்பார்கள். எதிர்பாராமல் நடுஜாமத்தில் சிலருக்கு கொலுசு சத்தம் கேட்பது, அவர்களே எதிர்பாராமல் நல்ல பன்னீர் வாசம், விபூதி வாசம், வீசுவது போன்ற நறு மணத்தை உணர முடியும்.

- Advertisement -

pachai-amman

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போம். மறுநாள் காலை விடிந்தவுடன் இரவு நடந்தது கனவா நிஜமா? என்ற நினைவும் நமக்கு புரியாமல் குழப்பமாகவே இருக்கும். இதை நிறைய பேர் உணரும் வரை நம்பவே மாட்டார்கள். ஆனால் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களுக்கு புரியும். இரவு தெய்வத்தின் நடமாட்டம் இந்த பூலோகத்தில் உண்டு என்பது.

irukkankudi-amman

இதனால்தான் அந்தக் காலத்தில் முன்னோர்கள் இரவில் வாசலுக்கு நேராக படுக்க கூடாது என்று சொல்லுவார்கள். இன்றளவும் அது உண்மைதான். இரவு தூங்கும்போது நம் வீட்டிற்குள் தெய்வங்கள் உள்ளே வரும். அதனால் வாசலுக்கு நேராக படுப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. மூட நம்பிக்கையை உருவாக்குவதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவு அல்ல இது.

amman

அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் சில விஷயங்களை நமக்கு நல்லது கெட்டது என்று சொல்லி வைத்துதான் சென்று உள்ளார்கள். கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் அந்த இடத்தை பாதுகாப்பதற்கு தெய்வ சக்தி என்ற ஒன்று கட்டாயம் உள்ளது. அந்த கண்ணுக்குத் தெரியாத நல்ல சக்தி தான் இன்றளவும் இந்த பூலோகத்தை காப்பாற்றி வருகின்றது என்ற ஒரு கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -