MS Dhoni : வலைப்பயிற்சியில் தோனியுடன் சிக்ஸ் அடிக்கும் போட்டியில் நேருக்கு நேர் மோதிய சாஹல் – வைரல் வீடியோ

Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து நாளை ராஞ்சி நகரில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக இரு அணிவீரர்களும் தீவிர வலைப்பயிற்சியினை எடுத்து வருகின்றனர். இந்த வலைப்பயிற்சியின் இடையே சுவாரசியமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அதில் தோனியுடன் இளம் வீரர் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் சிக்ஸ் அடிக்கும் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

மேலும், ராயுடு, ஜடேஜா மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர் இதில் தோனியே அதிக தொலைவுக்கு சிக்ஸ் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Virat Kohli : தோனியின் வீட்டில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கேப்டன் கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -