தோனியின் பொறுமையான ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் மேலும் ஓய்வு பெற வேண்டும் என கூறி – ரசிகர்கள் பொறுமை இழப்பு

Dhoni

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய விளையாடத்துவங்கியது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 53 ரன் குவித்தார்.

இந்நிலையில் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் தோனி தான் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் எடுத்த இந்திய அணி 10 ஓவர்களுக்கு வெறும் 46 ரங்களையே குவித்தது. இறுதிவரை காலத்தில் இருந்தும் 37 பந்துகளுக்கு 29 ரன்கள் மட்டுமே தோனியால் அடிக்க முடிந்தது. பந்துகளுக்கு ஏற்ற ரன்கள் அடித்திருந்தால் கூட அது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

dhoni

மேலும், இந்த தொடரே அவருக்கு ஓய்வு முடிவினை அறிவிக்க சரியான தருணம். எனவே, இந்த டி20 தொடரோடு அவர் இந்த வகை போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்கலாம். 50 ஓவர் போட்டிகளில் உலகக்கோப்பை தொடருக்கு பின் அறிவிக்கட்டுமா என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி துவங்கும் முன் அனைவரையும் 2 நிமிடம் நெகிழவைத்த வீரர்கள் – காரணம் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்