ஆஸி அணிக்கு எதிரான 2வது போட்டியின் போது கலீல் அஹமதை கெட்டவார்த்தையில் திட்டிய தோனி – வீடியோ

dhoni

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி 15ஆம் தேதி நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலிய அணி பலமாக களமிறங்கியது . இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரின் முடிவினை காண முடியும் என்பதால் வெற்றி பெரும் நம்பிக்கையோடு களமிறங்கியது .

rayudu

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஷான் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 298 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தனர். பின்பு பெரிய இலக்கினை எதிர்த்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் தவான் சிறந்த அடித்தளம் அமைக்க அடுத்து வந்த கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டியில் தனது 39வைத்து சதத்தினை பதிவு செய்தார். மேலும், சென்ற போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று விமர்சிக்கப்பட்ட தோனி இந்த போட்டியில் அரைசதம் அடித்து அவரது பாணியில் வெற்றியை ஈட்டு தந்தார்.

இந்நிலையில் ஆட்டத்தின் இடையே தண்ணீர் குடுக்க வந்த இந்திய அணி வீரரான கலீலை அவர் ஹிந்தி கெட்டவார்த்தை ஒன்றின் மூலம் திட்டியது இப்போது வெளியாகியுள்ளது. ஆனால், ஏன் தோனி அவரை திட்டினார் என்பது தெரியவில்லை.

இதையும் படிக்கலாமே :

உடனே இவரை அணியில் இணையுங்கள். இவரே ஆஸ்திரேலிய தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரின் துருப்புச்சீட்டு – கங்குலி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்