நவகிரகத்தை சுற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

navakiraga manthiram
- Advertisement -

இந்த பூமியையும் பூமியில் வாழும் நம்மையும் ஆட்டிப் படைக்க கூடிய சக்தி நவகிரகங்களுக்கு மட்டுமே உள்ளது. ஆகையால் தான் ஒருவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களோடு வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் இந்த கிரகங்களின் தன்மையை வைத்து கணக்கீடு செய்கிறோம். இப்படி கணக்கிட்டு சொல்வதை தான் ஜோதிடம் என்று சொல்லப்படுகிறது.

இதில் ஆன்மிகம் எந்த அளவிற்கு கலந்திருக்கிறதோ அதே அளவு இந்த ஜோதிடத்தில் அறிவியலும் கலந்து இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நவகிரகங்களின் தன்மைகளை நாம் மூன்று வகையாக பிரித்து வைத்துள்ளோம். அதில் ஒன்று நன்மை செய்யும் கிரகங்கள் மற்றொன்று தீமை செய்யும் கிரகங்கள். மூன்றாவதாக மத்தியம கிரகங்கள். இந்த மூன்றாவது கிரகமானது சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்மையும் செய்யும் தீமையும் செய்யும்.

- Advertisement -

இப்படியான கிரகங்களால் நம் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை எப்படி அனுபவிக்கிறோமோ அதே போல் தீமைகளும் உண்டு. இந்த கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பு நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க அருமையான ஒரு எளிய மந்திர வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நவகிரகங்களின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மந்திரம்

ஒவ்வொரு ஆலயத்திலும் நவகிரகத்திற்கு என தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இந்த நவகிரகங்களை முறையாக வழிபட்டு வருபவர்கள் கிரகங்களின் பாதிப்பிலிருந்து தங்களை வெகுவாக காத்துக் கொள்ளலாம் என்பது மறுக்கப்படாத உண்மை. இந்த நவகிரகத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு உண்டு. இதை செய்தால் நம்முடைய வாழ்க்கை மாறி விடுமா ? என்பன போன்ற கேள்விகள் பலருக்கும் எழலாம்.

- Advertisement -

ஆலயங்களில் நவகிரகங்களை பிரதிஷ்டை செய்து இருப்பதே அதற்கான திசையில் வைத்து அதற்கான மந்திர வழிபாட்டை முறையாக செய்து அதற்கான சக்தியை ஏற்படுத்தி தான் வைத்திருப்பார்கள். அந்த நவகிரகத்தை நாம் முறையாக வணங்கி சுற்றி வரும் போது அந்த எதிர்வலைகள் நம்மையும் தொடர்ந்து நமக்கு நேர இருக்கும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கும் என்பது தான் இந்த நவகிரக வழிபாட்டிற்கான காரணம்.

இந்த நவகிரகங்களை பற்றியும் அவற்றின் வழிபாடு தன்மை இவற்றைப் பற்றியும் கூற இந்த ஒரு பதிவு நமக்கு போதாது. இப்போது இந்த நவகிரகங்களை நாம் எப்படி சுற்றி வர வேண்டும் அப்படி சுற்றிவரும் வேளையில் எந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பொதுவாக நவகிரகங்களை சுற்றும் போது ஒன்பது முறை சுற்றுவார்கள். அதிலும் ஏழு சுற்றுகள் ஒரு திசையிலும் மீதம் இருக்கும் இரண்டு சுற்றுகளை அதன் எதிர் திசையிலும் சுற்றுவார்கள் அப்படி சுற்றக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்பது சுற்றுக்களையும் ஒரே திசையில் தான் சுற்ற வேண்டும். அதுமட்டுமின்றி நவகிரகத்தை சுற்றுவதன் முழு பலனையும் பெற நவகிரகத்தை 11 சுற்றுகள் சுற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஒன்பது சுற்றுகள் கிரகங்களுக்கான தாகவும், இரண்டு சுற்றுகள் கீழ்த்திசை மேல் திசையாகவும் கருதப்படுகிறது. ஆகையால் எப்பொழுது நீங்கள் நவகிரகத்தை வணங்கினாலும் 11சுற்றுகள் சுற்ற வேண்டும். அதே போல் நவகிரகத்திற்கான வழிபாட்டிற்கு உகந்த நாள் சனிக்கிழமை மட்டுமே மற்ற நாளில் இந்த நவகிரகத்திற்கான எந்த வழிப்பாடும் அத்தகைய சிறப்பான பலனை தராது. இப்படி நவகிரகத்தை சுற்றும் வேளையில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் ஹரீம் ஆதித்யாய சோமாய
மங்களாய புதாயச குரு
சுக்கிர சனிப்யச்ச
ராஹவே கேதவே நமஹ

இந்த மந்திரத்தை நவகிரகத்தை சுற்றும் ஒவ்வொரு முறையும் நிதானமாக சொல்லுங்கள். அதாவது நீங்கள் சுற்றும் 11 சுற்றின் போதும் 11 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இதனால் நவகிரகங்களும் உங்களுக்கு நன்மை செய்யும் கிரகமாக மாறி விடும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திர வழிபாட்டை தொடர்ந்து செய்யும் வரும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் பல விதமான நல்ல விஷயங்கள் நடப்பதை நீங்கள் உணரலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் குபேர மந்திரம்

நவகிரக வழிபாடு குறித்த இந்த பதிவில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால் நீங்கள் இந்த மந்திர வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் அடையலாம். இந்த தகவலுடன் ஆன்மீகம் தொடர்பான இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -