இதை மட்டும் செய்தால் சாகும் வரை சர்க்கரை வியாதியே வராது தெரியுமா?

sugar control

சர்க்கரையும் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கக் கூடிய ஒன்று தான். ஆனால் நாம் உண்ணும் உணவில் சர்க்கரையானது ஆற்றலாக மாற்ற முடியாமல் போகும் பட்சத்தில் உடலின் அனைத்து பகுதிகளும் பாதிப்படைகிறது. சர்க்கரை நோய்க்கு தாயகமாக நமது இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. சர்க்கரை வியாதி என்பது இன்று பலரையும் அச்சுறுத்தும் வாழ்நாள் நோய்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பரம்பரை வியாதியாக இந்நோய் இருப்பதால் அடுத்த அடுத்த சந்ததியினருக்கும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உணவு முறை மாற்றங்களாலும் பெருமளவு அவதிப்பட்டு வருகிறார்கள். சர்க்கரை சத்து அதிகம் கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Sugar test

மாறி போன உணவு கலாச்சாரம் மற்றும் உடல் உழைப்பின்மை இந்நோய்க்கு முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது. உடலில் இன்சுலின் சுரப்பு குறைவதாலும், பாதிக்கப்படுவதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. பாரம்பரியம் காரணமாகவும் சர்க்கரை நோய் உண்டாகிறது. இது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமல் போனது தான் வருத்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வருமுன் காப்பதே நல்லது. வந்த பின் கஷ்டப்பட்டு என்ன பயன் இருக்கிறது? சர்க்கரை நோயே வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று தான் இப்பதிவில் இப்போது காணவிருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ – 100 கிராம்
கோரை கிழங்கு – 100 கிராம்
கருஞ்சீரகம் – 100 கிராம்
பருத்தி கொட்டை – 100 கிராம்
எள்ளு புண்ணாக்கு – 100 கிராம்

sugar control

இந்த ஐந்து பொருட்களையும் தனி தனியாக காய வைத்து அரைத்து கொள்ளுங்கள். பின்னர் நன்கு சலிக்க வேண்டும். சலித்த பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் மூடி வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

காலை மற்றும் இரவில் தொடர்ந்து 48 நாட்களுக்கு அரை ஸ்பூன் வீதம் 100ml சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். பாதியளவு சுண்டியதும் ஆற வைத்து குடித்து வர வேண்டும். இந்த கசாயத்தை குடிக்கும் பொழுது மது, மாமிசம் எடுத்து கொள்ளவே கூடாது. பாகற்காய் உணவில் சேர்க்கவும் கூடாது.

Low sugar symptoms

உச்சி முதல் பாதம் வரை முழுவதுமாக தாக்கக் கூடிய நோய் சர்க்கரை நோய் ஒன்று தான். உடலின் அனைத்து பகுதிகளும் இந்நோயால் பாதிப்படையும். அலட்சியம் காரணமாக பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகிறார்கள். 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும். உணவு எடுத்து கொள்வதற்கு முன்னர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60 முதல் 110mg இருக்க வேண்டும். உணவு எடுத்து கொண்ட பின்னர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 140 க்குள் இருக்க வேண்டும். இவை கூடும் பட்சத்தில் சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

sugar control

48 நாட்கள் இந்த மூலிகை கசாயத்தை தொடர்ந்து எடுத்து கொள்வதன் மூலம் சாகும் வரை சர்க்கரை வியாதியே வராது. அத்துடன் விட்டு விடாமல் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதும் அவசியமாகும். உணவு முறையை முடிந்த மட்டும் மாற்றி கொள்ள முயற்சிகள் மேற்கொள்வது நன்மைகளை தரும். நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியம் மேல் மிகுந்த அக்கறை தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நலமுடன் வாழுங்கள்.

இதையும் படிக்கலாமே
நமது மூளையை பாதிக்கும் ஆபத்தான ஏழு தீய பழக்கங்கள் பற்றி தெரியுமா?

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sakkarai viyathi in Tamil. Sakkarai noi maruthuvam. Sakkarai noi tips. Diabetes in Tamil.