DTH : டிராய் விதிகளின் கீழ் டிஷ் டிவி டி.டி.எச் சேனல்களை தேர்வு செய்வது எப்படி என்று தெரியுமா ? – விவரம் இதோ

Dish-TV
- Advertisement -

டிராய் வரையறுத்த விதிகளின் கீழ் டி.டி.எச் நிறுவனங்களுக்கு அதன் வாடிக்கையாளர்கள் தேவைப்படும் சேனலை சேமிக்கவும் நீக்கவும் வழிமுறைகளை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் சேனல் பேக்குகளை தேர்வு செய்வது எப்படி என்ற முழுவிவரத்தினை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

Dth 1

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வெளியான டிராய் விதிகளின் கீழ் கேபிள் மற்றும் டி.டி.எச் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 100 சேனல்களுக்கு 130 ரூபாய் ஜி.எஸ்.டி உடன் கட்டணமாக செலுத்த வேண்டும் இன்று அறிவித்தது. தற்போது டிஷ் டிவி டி.டி.எச் சந்தாதாரர்கள் தங்களது மாதாந்திர சேனல் பேக் சேர்க்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலம் உங்களது அக்கவுண்ட் உள்நுழைந்து சேனல் பேக் மாற்றங்களை செய்யலாம்.

- Advertisement -

மாதாந்திர கட்டணம் 130 ரூபாய் இருந்தாலும் கட்டண சேனலை நீங்கள் தனியாக சேர்த்தால் அதற்கான கட்டணத்தை நீங்கள் சேர்த்து கட்டவேண்டும். இது ஒவ்வொரு கட்டண சேனலுக்கும் பொருந்தும். 100 சேனல்களுக்கு மேல் நீங்கள் கூடுதல் 25 சேனல்களை சேர்த்தால் அதற்கு தனியாக 20 ரூபாய் கட்டணமாக அளிக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மற்றும் தெற்கு மாநிலத்தை அடிப்படையாக கொண்ட சேனல் பேக்குகளும் டிஷ் டிவி-யில் உள்ளது.

Dth (2)

இணையத்தில் டிஷ் டிவி பக்கத்தில் உங்களது கணக்கின் கீழ் சென்று தேவைப்படும் சேனலை சேர்க்கவோ அல்லது நீக்கவோ உங்களுக்கு உரிமை உண்டு. சேர்த்தால் அதற்கான கட்டணம் தனியாக கட்டவேண்டும். தேவையில்லை என்றால் நீக்கி அந்த சேனலை தவிர்க்கலாம்.

- Advertisement -