கொரோனா நோயாளிகள் எந்த எண்ணை தொடர்பு கொண்டால் உடனே மருத்துவமனை கிடைக்கும்? அரசு வெளியீடு

- Advertisement -

கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தை ஒரு பாடு படுத்தி வருகிறது. முதல் அலையின் போது இருந்த தீவிரத்தை காட்டிலும் இரண்டாம் அலையில் அதி தீவிரமாக நோய் பரவி வருகிறது. இன்னும் சில நாட்கள் பொறுத்து தான் தமிழகத்தில் கொரோனா உச்சம் தொடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட வாரியாக வார் ரூம் அறிவித்துள்ளம்..

corona

வார் ரூம் என்றால், அவசர காலத்தில் கொரோனா நோயாளிகளை எங்கு சேர்ப்பது? எந்த மருத்துவமனையில் பெட் காலியாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள உதவும் ஒரு மையம். மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் அவர்கள் நமக்கு உடனடியாக உதவுவார்கள்.

- Advertisement -

சென்னையில் ஆரம்பத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த வார் திட்டம் இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த பட்டுள்ளது. அதன் படி மாவட்ட வாரியான வார் ரூம் எங்கள் இதோ.

udhavi-en

வார் ரூமை தொடர்புகொள்வோர் நோயாளியின் முழுமையான விவரத்தை அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக அவர்களுடைய தற்போதைய ஆச்சிஜன் லெவல் எவ்வளவு, அவர்களுடைய பெயர், வயது, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா, இது போன்ற விவரங்களை தெரிந்துவைத்துக்கொண்டு அழைப்பதன் மூலம் அவர்கள் நமக்கு சிறப்பாக உதவ முடியும்.

தமிழக அரசின் இந்த முயற்சி இந்த சமயத்தில் நிச்சயம் வரவேற்க தக்க ஒன்று. அதே சமயம் மக்கள் அனைவரும் அரசு கூறுவதை கேட்டு கட்டுப்பாட்டோடு இருப்பது அவசியம்.
- Advertisement -