பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள்! இந்த தவறுகளை செய்தால் கட்டாயம் நிம்மதி இருக்கவே செய்யாது தெரியுமா?

pooja-room-kula-dheivam

பூஜை அறையில் ஒருவர் செய்யவே கூடாத தவறுகள் என்னவெல்லாம் தெரியுமா? நாம் பூஜை அறையில் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இழக்கச் செய்துவிடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தெய்வ சிலைகளை வீட்டில் வைக்கவே கூடாது ஆனால் அதனை பலரும் தெரியாமல் வாங்கி வைத்துவிட்டு பின்னர் அவதிப்படுவது உண்டு. இது போல உங்கள் பூஜையறையில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

pooja-room1

ஒரு சிலர் கோவில்களுக்கு செல்லும் பொழுது அங்குள்ள அத்தனை படங்களையும் வாங்கி வந்து வீட்டில் அடுக்கி வைத்து விடுவார்கள். எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு உள்ள மூலவர் உடைய திரு உருவ படங்களை வாங்கி வைப்பது உண்டு. இப்படி பூஜை அறை முழுவதும் பல்வேறு விதமான தெய்வ படங்களை அடிக்கி வைப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஒரு வீட்டில் பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய படங்களில் முதன்மையானது குலதெய்வத்தின் உடைய படம் தான். குலதெய்வ படம் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு தெய்வ படங்களை வைத்து இருந்தாலும் அதில் பெரிய அளவில் நன்மை இல்லை. குலதெய்வம் தான் முதன்மையான தெய்வம். எனவே குல தெய்வத்தின் உடைய அருள் பெற குலதெய்வத்தை பூஜை செய்ய வேண்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகன், அம்மன் போன்ற தெய்வங்களை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடலாம்.

thiruchendur

மேலும் இஷ்ட தெய்வத்தின் உடைய படங்களை வைத்துக் கொள்ளலாம். அதை தவிர்த்து நிறைய படங்களை அடுக்கி வைத்தால் தான் பக்தி என்கிற நினைப்பே தவறானது தான். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நிச்சயம் இடைவெளி இருக்க வேண்டும். கன்னா பின்னாவென்று எல்லா படங்களையும் அடுக்கி வைத்தால் அங்கு லட்சுமி கடாட்சம் குறைகிறது. நமக்கு அலுப்பை தட்டி பூஜை செய்வதில் இருக்கும் நாட்டமே போய்விடும். இத்தனை படங்களை சுத்தம் செய்து, இத்தனை பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்குள் நமக்கு சோர்வு உண்டாகிவிடும். பூஜை செய்வதில் இருக்கும் பக்தி குறையும். இதனால் தான் உங்களுக்கு தேவையான படங்களை மட்டும் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

நீங்கள் தரையில் அமர்ந்து பூஜை செய்பவர்களாக இருந்தால் கட்டாயம் தரையில் உங்களுடைய உடலானது பதியக் கூடாது. ஏதாவது ஒரு சுத்தமான விரிப்பை விரித்து வைத்து அதில் அமர்ந்து கொண்டு தான் பூஜைகளை செய்ய வேண்டும். நின்று நிதானமாக அமர்ந்து முழு பக்தி சிரத்தையுடன் பூஜை செய்பவர்களுக்கு எத்தகைய வேண்டுதல்களும் உடனே பலிக்கும். அதை விடுத்து நானும் பூஜை செய்கிறேன் என்கிற பெயரில் நிறைய பூஜை படங்களை அடுக்கி வைப்பதும், அதனை சுத்தம் செய்ய முடியாமல் தவிப்பதும் வீட்டில் நிம்மதியை இழக்கச் செய்துவிடும்.

poojai

எந்த ஒரு வீட்டில் அடிக்கடி பூஜைகள் நடக்கிறதோ! அந்த வீட்டில் தான் சுபிட்சம் இருக்கும். அது போல குலதெய்வ வழிபாடு இல்லாத வீட்டில் கட்டாயம் நிம்மதி என்பது இருக்க செய்யாது. அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு செல்வதும், பூஜையறையில் குலதெய்வ படத்தை வைத்து முதன்மை இடத்தை அவருக்கு கொடுப்பதும் மென்மேலும் நம்மை வாழ்க்கையில் முன்னேற செய்யும்.