உங்கள் வீட்டில் பீரோவை எப்படி வைத்திருக்கக் கூடாது தெரியுமா? இப்படி மட்டும் தெரியாமல் கூட வைத்து விட்டால்! என்ன செய்தாலும் பணம் சேரவே சேராது.

bero-lakshmi

எல்லோருடைய வீட்டிலும் பீரோ வைக்கும் திசை என்பது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலும் பீரோவில் தான் நாம் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து வைப்போம். பணம் வைக்கும் இடம் சரியாக இல்லாவிட்டால் வாஸ்து படி அந்த வீட்டில் வருமான தடை ஏற்படும் என்கிறது ஜோதிடம். இதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

money4

பணம் வைக்கும் திசை மற்றும் முறை இந்த இரண்டுமே வீட்டின் பணவரவை நிர்ணயம் செய்கிறது என்று வாஸ்து ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் வீட்டின் எந்த ஒரு திசையில் வேண்டுமானாலும் நாம் பணத்தை தாராளமாக வைத்துக் கொள்ளலாம் ஆனால் தெற்கு பார்த்தபடி பணத்தை வைக்கக் கூடாது என்பது நியதி. தெற்கு! பணத்தை நிலைக்கச் செய்யாது. கோடி கோடியாக அந்த இடத்தில் பணம் இருந்தாலும் கரைந்துவிடும்.

கிழக்கு மற்றும் மேற்கு திசையைப் பார்த்தபடி பணத்தை வைக்கலாம். ஆனால் அதை விட குபேரனுக்கு உரிய திசையாக இருக்கும் மேற்கு திசையை பார்த்தவாறு பணத்தை வைப்பது தான் நமக்கு மேலும் மேலும் பணத்தை பெருக செய்து, வருமானத்தையும் அதிகரிக்க செய்யும் என்று ஜோதிடம் கூறுகிறது. அப்படி வடக்கு திசையைப் பார்த்தபடி பணத்தை வைக்கும் பொழுது நாம் பணப்பெட்டி அல்லது பீரோ வைத்திருக்கும் போது தெற்கு திசையை பார்த்து நிற்க வேண்டும். பணம் வைக்கும் பொருளானது வடக்கு திசையைப் பார்த்தபடி இருக்க வேண்டும்.

cash-box

பீரோ மற்றும் பணப்பெட்டி எதுவாக இருந்தாலும் ஒரு அறையின் நான்கு மூலைகளிலும் ஒட்டியுள்ளபடி வைக்கக் கூடாது. அதாவது நீங்கள் படுக்கை அறையில் பீரோவை வைத்து இருக்கிறீர்கள் என்றால், அந்த அறையின் நான்கு மூலைகளிலும் எந்த இடத்தில் நீங்கள் பீரோவை வைத்தாலும் சுவற்றை ஒட்டி வைக்க கூடாது. சுவற்றை ஒட்டி வைக்கும் பொழுது அங்கு பணத்தடை கட்டாயம் ஏற்படும். சுவற்றில் இருந்து சற்று தள்ளியே வைக்க வேண்டும்.

- Advertisement -

பீரோவை வடக்குத் திசையை பார்த்து வைக்கும் போது சுவற்றை ஒட்டி வைக்காமல் சற்று தள்ளி வைக்க வேண்டும். பீரோவின் பின்புறத்திலும் ஓரளவுக்கு சிறிய இடைவெளி ஆவது கட்டாயம் இருக்க வேண்டியது அவசியமாகும். அந்த இடத்தில் வாயு பகவான் ஊடுருவ இடம் இருக்க வேண்டும். காற்று அடைந்த பகுதியில் பணம் இருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் பணம் சேர்வது தடுக்கப்படும்.

bero

அது போல ஒரு வீட்டில் பணம் என்பது மகாலட்சுமியாக மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே கண்ட இடத்தில் பணத்தை மற்றும் நாணயங்களை போட்டு வைப்பது என்பது மகா லட்சுமி கடாட்சத்தை குறைக்க செய்துவிடும். மணிபர்ஸ், பூஜை அறை, பீரோ, பணத்தை சேமிக்கும் கலன்கள் ஆகிய இடங்களில் மட்டுமே பணம் இருக்க வேண்டும். நீங்கள் கண்டபடி கண்ட இடத்தில் பணத்தை போட்டு வைத்தால் மகாலட்சுமி உங்களுடன் நிரந்தரமாக தங்க மாட்டாள்.

money

பணம் என்பது நிலையான ஒன்று அல்ல! இன்று உங்களிடம் இருக்கும், நாளை வேறு ஒருவருடைய கைகளில் இருக்கும், எனவே அதனை சரியான வழியில் சம்பாதித்து, சரியான வகையில் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். இது போன்ற சிறு சிறு விஷயங்களை நாம் பின்பற்றும் பொழுது நம்முடைய வருமானம் அதிகரிக்கும் மேலும் மேலும் பணம் பெருகும் என்பது வாஸ்து மற்றும் ஜோதிட நம்பிக்கை.