உங்கள் பர்சில் இதெல்லாம் இருந்தால் நிச்சயம் பணம் சேரவே சேராது. எப்படி வைத்துக் கொண்டால் பணம் நிறைய சேரும் என்ற ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

purse-money

சில பொருட்களை பர்சில் வைப்பதால் பணம் மென்மேலும் பெருகும். இதை தனவசியம் செய்வதற்கான சூட்சம குறிப்புகளாக நாம் பார்த்திருப்போம். உதாரணத்திற்கு பர்ஸில் புதினா இலைகளை வைப்பது, பச்சை கற்பூரத்தை வைப்பது, மகாலட்சுமி படத்தை வைப்பது, பணத்தை ஈர்க்கும் கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை வைப்பது இது போன்ற குறிப்புகள் அனைத்தும் பணத்தை அதிகரிக்க செய்யும். அவ்வகையில் பர்சில் நீங்கள் வைக்கவே கூடாத சில பொருட்களும் உண்டு. இந்த பொருட்களை எல்லாம் நீங்கள் பர்சில் வைப்பதால் பணம் சேரவே சேராது. எந்த மாதிரியான பொருட்கள் பணம் சேர விடாமல் தடுக்கும் என்கிற ரகசியத்தை இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

purse

பொதுவாகவே நாம் விரும்புவது நம்மளுடைய பர்சில் எப்போதும் பணம் நிரம்பியே இருக்க வேண்டும் என்பதைத்தான். நம்முடைய பர்ஸ் கனத்து இருக்கும் பொழுது மனதில் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். அதுவே பர்ஸ் காலியாக இருந்தால் நம்மிடம் நிம்மதியும், சந்தோஷமும் கூட இருக்காது. எல்லா நேரமும் ஒன்று போல் இருப்பதில்லையே. ஒரு நேரம் நம்மிடம் அதிக பணமும், சில நேரம் சுத்தமாக இல்லாமலும் இருப்போம். தெரிந்தோ, தெரியாமலோ சிலர் இந்த பொருட்களை பர்சில் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த பொருட்களை உங்கள் பர்ஸில் நீங்கள் வைத்திருந்தால் தயவுசெய்து தூக்கி எறிந்து விடுங்கள். இதனால் பணவரவு தடைபடும். அப்படி என்ன பொருட்கள் பர்சில் வைக்கக்கூடாது என்பதை பார்ப்போம்.

முதலில் உங்களுடைய பர்ஸ் எப்போதும் கிழிந்து போயிருக்கக் கூடாது. ஓரத்தில், சிறு இடங்களில் கூட ஓட்டை இல்லாமல் இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விதி. மகாலட்சுமி அதிகம் தங்குவது இந்தப் பர்ஸில் தான். எனவே பர்ஸில் ஓட்டை வந்துவிட்டால் அல்லது கிழிந்து விட்டால் தயவுசெய்து உடனே மாற்றி விடுங்கள். ராசியான பர்ஸ் என்று சிலர் கிழிந்து, நைந்து போன பர்சை கூட பத்திரமாக வைத்திருப்பார்கள். இதுபோன்ற சென்டிமென்ட் பர்ஸ்களை சில ரூபாய் நோட்டுகள் வைத்து பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். உபயோகப்படுத்தாதீர்கள். நல்ல பர்ஸ்களை மட்டும் அன்றாட பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளுங்கள்.

bill

பர்ஸில் வைக்கக்கூடாத முக்கிய பொருட்களில் ஒன்றாக இருப்பது பழைய மளிகை சாமான்கள் வாங்கிய அல்லது உங்களுக்கு வேண்டிய ஏதேனும் பிற பொருட்களை வாங்கிய பில்களை வைக்கக்கூடாது. இது நேர்மறை ஆற்றல்களை உங்களை சுற்றி வெளிப்படுத்தும் தன்மை பெற்றது. அவற்றைப் பார்க்கும்போது உங்களிடம் இருக்கும் நல்ல ஆற்றல்களும் குறைந்துவிடும். இதனால் பணம் சேர்வது தடுக்கப்படும்.

- Advertisement -

இரண்டாவதாக நீங்கள் வைக்கக்கூடாத பொருள் என்ன தெரியுமா? மிகவும் அகோரமான படங்களையும், ஆபாசமான படங்களையும் கட்டாயம் வைக்கக்கூடாது. அதேபோல உக்ர காளியம்மன் படத்தையும் கண்டிப்பாக வைக்கக்கூடாது. இதுபோன்ற படங்கள் உங்கள் பர்சில் இருந்தால் இப்போதே தூக்கி எறிந்து விடுங்கள். இவைகள் உங்களுக்கு பணம் சேருவதை தடைசெய்யும் பொருட்களாகும். இந்த படங்கள் உங்கள் பர்சில் இருந்தால் எவ்வளவு பணம் இருந்தாலும் அது நல்ல காரியத்திற்காக பயன்படாமல் போய்விடும். வீண் விரயங்கள் தான் உண்டாகும்.

kaali

அதேபோல உங்கள் பர்ஸில் அல்லது பாக்கெட்டில் மருந்து மாத்திரைகளையும், உணவுப் பொருட்களையும் வைக்கவே கூடாது. இதுவும் நேர்மறை அதிர்வலைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது மென்மேலும் உங்களை பலவீனமாக்கும். உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டத்தை துரதிஷ்டமாக மாற்றும். அவசிய தேவைகள் உள்ளவர்கள் உங்கள் மருந்து மாத்திரைகளை தனியாக ஒரு பையில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் உபயோகப்படுத்தும் பர்சில் வைப்பதை முடிந்த மட்டும் தவிர்ப்பது நல்லது.

அடுத்ததாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி நாம் நம்முடைய தற்காப்பிற்காக சில ஆயுதங்களை பர்சில் வைத்து இருப்போம். உதாரணத்திற்கு கத்தி, கூர்மையான பொருட்கள், வத்திப்பெட்டி இது போன்ற பொருட்களை கட்டாயம் வைக்கக்கூடாது. பெண்களின் பாதுகாப்பிற்கு வேறு சில பொருட்கள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. பெப்பர் ஸ்ப்ரே வைத்துக்கொள்ளலாம். அதை விடுத்து ஆயுதங்கள் வைத்திருப்பது பணவரவை தடைப்படுத்தும். எதிர்மறை ஆற்றல்களை உங்களை சுற்றி உருவாக்கும். எப்போதும் பாதுகாப்பில்லாத ஒரு உணர்வு உண்டாகும். இந்த எதிர்மறை சிந்தனைகளை தூண்டக்கூடிய ஆயுதங்கள் பர்சில் வைத்திருப்பது தேவை இல்லாத ஒன்று தான்.

purse

இறுதியாக உங்களுடைய பர்ஸ் எப்போதும் காலியாக கட்டாயம் இருக்கக் கூடாது. ஒரு ரூபாய் நாணயமும், சில நோட்டுகளும் கட்டாயம் எப்போதும் இருக்க வேண்டும். முழுவதுமாக துடைத்து எடுத்து விட்டால் உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டம் விலகிவிடும். இனி வர வேண்டிய அதிர்ஷ்டங்களும் வராது என்பதை கூறி இப்பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
பகலில் பிறந்தவர்களை விட இரவில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளா? எந்த நேரத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிஞ்சிக்கணுமா?

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Don keep this things your purse. Attract money in your purse. Purse astrology. How to attract money in purse. What to keep in purse to attract money.