உங்கள் கட்டில் கீழே என்ன இருக்கிறது? இதெல்லாம் இருந்தால் வீட்டில் பிரச்சனை தான் வரும்!

bed-shoe
- Advertisement -

இப்போது எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் கட்டில் என்ற ஒன்று இருக்கும். குடிசை வீடாக இருந்தாலும் கட்டில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். நாம் நிம்மதியாக உறங்கும் ஒரு இடம் அது. அந்த கட்டிலுக்கு கீழே குப்பை போல் ஒரு சிலர் போட்டு வைத்திருப்பார்கள். இப்படி குப்பையாக இருந்தால் வீட்டில் தேவையில்லாத வம்பு, வழக்குகள், மனக்கஷ்டங்கள் உருவாகக் கூடும். நாம் வாழும் வீட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அறையும் தனித்துவமாக வெவ்வேறு ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய அம்சமாக அமைந்து இருக்கும்.

bed-room

பூஜை அறையில் தெய்வாம்சம் எப்படி நிரம்பியிருக்கிறது? அது போல் தான் ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு ஆற்றல்களை வெளியிடும். அதில் நாம் படுத்து உறங்கும் கட்டில் இருக்கும் படுக்கை அறை நேர்மறை ஆற்றல்களை வெளியிடுவதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

- Advertisement -

கட்டிலுக்கு கீழே கட்டாயம் குப்பை போல் அடைத்து வைத்திருப்பது எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும். நம் வீடும் நம் மனமும் ஒன்று தான். நம் மனதில் குப்பை போல் தேவையில்லாத எண்ணங்களை சேர்த்து வைத்தால் என்ன ஆகும்? தேவையில்லாத சிந்தனைகள் வாழ்க்கை பாதையை மாற்றி ஒழுக்கத்தை கெடுத்து விடும். அதே போல் தான் வீட்டிலும் தேவையில்லாத குப்பைகளை சேர்த்தால் அது எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும்.

under-bed

இதனால் குடும்பத்தில் நிறைய சிக்கல்களும், பணவரவு தடையும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது போல் தான் படுக்கை அறையை குப்பையாக வைத்திருந்தால் அது நல்ல சிந்தனைகளை நமக்குத் தருவதில்லை. ஒருவரது கட்டிலுக்கு கீழே பார்த்தால் சுத்தமாக எந்த பொருளும் இல்லாமல் இருக்க வேண்டும். கண்ட குப்பைகளை சேகரித்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்தால் அதில் மூட்டைப் பூச்சிகளும், கரப்பான் பூச்சிகளும், எலிகளும் தான் இருக்கும். இவையெல்லாம் நேர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தி எதிர்மறை ஆற்றல்களை வெளிவிடும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பழைய இரும்பாலான ட்ரங்க் பெட்டிகள், கடினமான ஆயுதங்கள் போன்ற பொருட்களை கட்டிலுக்கு அடியில் போட்டு வைப்பதால் அந்த வீட்டில் நிம்மதி என்பது இருக்கவே இருக்காது. குப்பைகளை சேர்த்து வைக்க பரண் அமைக்கப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அதையும் மீறி உங்கள் வீட்டு கட்டிலுக்கு அடியில் நீங்கள் குப்பை போல் சேகரித்து வைத்தால் வீண் பிரச்சனைகள் தான் வீட்டில் வரும். நல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு வரவேண்டியது இருந்தாலும் அவைகள் தடைபட்டுவிடும்.

trunk-petti

பயன்படுத்திய பழைய துணிமணிகள், காலணிகள் போன்றவை கட்டாயம் கட்டிலுக்கு அடியில் இருக்கக் கூடாது. முக்கியமாக நீங்கள் செய்யும் தொழில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் கட்டிலுக்கு அடியில் வைக்கவே கூடாது. பலரது வீடுகளில் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப, இடம் இல்லாத காரணத்தினால் அந்த பொருட்களை எல்லாம் கட்டிலுக்கு அடியில் குவித்து வைப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். இது போல் செய்யவே செய்யக் கூடாது.

- Advertisement -

under-bed1

தொழில் என்பது நம்முடைய வாழ்வாதாரத்தை குறிக்கும். அவற்றை கட்டிலுக்கு அடியில் போட்டு வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய ஒரு இடத்தில் நீங்கள் என்ன போட்டு வைத்துள்ளீர்கள்? என்று இப்போதே நீங்களே பாருங்கள்! அப்புறம் எப்டிங்க நீங்க நிம்மதியா இருக்க முடியும்?

இதையும் படிக்கலாமே
இந்த பொருளை மட்டும் யாராவது கொடுத்தால் வாங்கி விடாதீர்கள்! தரித்திரம் மற்றும் பாவம் வந்து சேரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -