சம்பளம் வாங்கியவுடன் உங்களின் முதல் செலவு கட்டாயம் இதற்காக இருக்க வேண்டாம்

money
- Advertisement -

நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு பணத்தை நாம் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அந்த பணத்தை நாம் சேமிக்கின்றோமா என்று கேட்டால்! இல்லை. என்றுதான் பலபேரின் பதில் இருக்கும். இதற்கு காரணம் என்ன? நாம் சம்பளம் வாங்கியவுடன் முதலில் எந்த செலவை செய்ய வேண்டும். எந்த செலவை செய்யக்கூடாது என்று சில விதிமுறைகள் இருக்கின்றது. சிலர் இதை பின்பற்றுவார்கள். சிலருக்கு இதைப் பற்றி தெரியாத காரணத்தினால் பின்பற்றாமல் இருப்பார்கள். ஆனால் இந்தப் பதிவின் மூலம் இந்த சூட்சமத்தை நீங்கள் தெரிந்து கொண்டு அதன்படி நடந்தால் உங்களது வருமானம் நிச்சயம் சேமிக்கப்படும். இது மிகவும் சுலபமான ஒரு வழி முறைதான். நீங்கள் அறிந்ததாக கூட இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் முறையாக செயல் படுத்துகிறீர்களா என்பதுதான் கேள்வி?

money

அந்தக் காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். நீங்கள் வாங்கும் சம்பளத்தில் முதலாவதாக நீங்கள் செய்யப்படும் செலவு என்பது மற்றவர்களுக்கு நல்லது தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதாவது 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் நபராக இருந்தால் 100 ரூபாய்க்கு தானம் செய்யுங்கள். நூறு ரூபாய்க்கு யாருக்கு என்ன தானம் செய்வது என்று புரியவில்லையா?

- Advertisement -

உங்கள் வீட்டில் உண்டியல் ஒன்று வைத்துக்கொள்ளுங்கள். தானம் என்று எழுதி அதன் மீது ஒட்டி விடுங்கள். அந்த உண்டியலில் நூறு ரூபாய் காசை சேமித்து வாருங்கள். நீங்கள் வாங்கும் பத்தாயிரத்தில், நூறு ரூபாய் பணத்தை தானம் செய்வது தவறு ஒன்றுமில்லை. வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு ஆசிரமத்திற்கு இந்த பணத்தின் மூலம் நீங்கள் உதவி செய்யலாம். ஆனால் ஒன்று நீங்கள் சம்பளமாக வாங்கிய பணத்தில் இருந்து இந்த நூறு ரூபாயை எடுத்து உண்டியலில் சேர்ப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு மனத் திருப்தி ஏற்படும். அது என்ன உணர்வு என்று வார்த்தையால் சொல்லிவிடமுடியாது. அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். இந்த மாதம் நீங்கள் இதை செய்து அந்த அனுபவத்தை உணருங்கள் உங்களுக்கே புரியும்.

ashramam

அடுத்ததாக அந்த பணத்தில் இருந்து சுவாமிக்கோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைக்கோ, மனைவிக்கோ, அம்மாவிற்கோ யாருக்காக இருந்தாலும் சரி மல்லிகைப் பூவை வாங்கி தருவது மிகவும் சிறந்தது. ஒரே ஒரு ரூபாய்காவது இனிப்பு பண்டத்தை வாங்குவது இன்னும் சிறந்தது. இப்படி ஒரு சுபச்செலவு உங்கள் சம்பளத்திலிருந்து முதலில் செய்து விடுங்கள்.

- Advertisement -

fllower

இதையெல்லாம் விட்டுவிட்டு சம்பளம் வாங்கியவுடன் மருத்துவத்திற்கோ, கடனாளிகளுக்கோ அதாவது வேண்டா வேண்டா வெறுப்பாக எந்த செலவையும் செய்யாதீர்கள். இந்த செலவுகள் எல்லாமும் முக்கியமானது தான். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. வாங்கிய சம்பளத்தில் முதன் முதலாக இந்த செலவு செய்யாதீர்கள் என்று தான் கூறப்படுகிறது. சில பேர் வாங்கிய முதல் சம்பளத்திலேயே சிகரெட், மது, மாமிசம் இவற்றையெல்லாம் கூட வாங்குவார்கள். இதெல்லாம் பாவச் செயல். வாங்கிய சம்பளத்தில் முதன்முதலாக இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் செய்யாதீர்கள். அந்த எதிர்மறை ஆற்றலானது உங்கள் சம்பள பணத்தில் முழுமையாக தொற்றிக்கொள்ளும். இதனால் அந்த மாதம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும் பணமானது வீண் விரயத்திற்க்கே போதாது! அப்புறம் எங்கு சேமிப்பது? இதையெல்லாம் நீங்கள் நம்பாவிட்டாலும் பரவாயில்லை. மூன்று மாதம் தொடர்ந்து இப்படி பின்பற்றி வாருங்கள் உங்களுக்கு மாற்றமானது தெரியவரும்.

இதையும் படிக்கலாமே
இரவில் படுத்தவுடன் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to spend your salary. How to spend your salary wisely. Spend your salary in Tamil. What to do with salary Tamil.

- Advertisement -