உங்கள் வீட்டில் கதவுகள் பொருத்தும் வாஸ்து விதிகள் பற்றி தெரியுமா?

kadavu-vastu
- Advertisement -

உலகில் இருக்கும் மற்ற உயிரினங்கள் எல்லாம் இயற்கையில் அமைந்திருக்கும் மரம், பாறை குகைகள் போன்றவற்றிலோ அல்லது புல், மரக்குச்சிகள் கொண்டோ தாங்கள் வசிக்கும் இடத்தை உருவாக்கி கொள்கின்றன. ஆனால் இவற்றில் மனிதன் மட்டுமே கற்கள், மரங்கள் பயன்படுத்தி வீடுகளை கட்டும் திறன் கொண்டவனாக இருக்கிறான். அப்படி மனிதன் வசிக்கும் வீட்டிற்கு இன்றியமையாததாக இருப்பது முன்வாயில், கதவு ஆகும். அந்த நுழைவாயிலில் பொருத்தப்படும் கதவுகளுக்கான வாஸ்து குறிப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

store-room-vastu

வாஸ்து சாஸ்த்திரத்தின் படி, ஒரு வீட்டின் முன்வாசல் என்பது அந்த வீட்டின் குடும்பத்தினர் உள்ளே சென்று வருவதற்கு மட்டும் கிடையாது மாறாக நல்ல சக்திகள் மற்றும் நல்ல எண்ணங்களை வீட்டினுள் சென்று தங்குவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. வருவதற்கான ஒரு வழியாகும். வீட்டின் நுழைவாயில் என்பது நிச்சயமாக அங்கு வசிப்பவர்களின் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாகும்., நாம் ஒவ்வொரு முறையும் வெளி உலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள் நுழைகிற போது நம்முடன் மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டங்கள் அனைத்தும் உள்ளே எடுத்து செல்ல உதவும் ஒரு வழி தான் வீட்டின் நுழைவாயில்.

- Advertisement -

பொதுவாக நுழைவாயிலில் பொருத்தப்படும் கதவானது மரத்தால் செய்யப்பட்ட கதவாக இருப்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. தெற்கு திசையில் இருக்கும் கதவானது மரம் மற்றும் உலோகம் இரண்டும் சேர்ந்த கலவையாக இருக்க வேண்டும். மேற்கு திசையில் இருக்கும் கதவுகள் உலோக வேலைப்பாடுகள் கொண்டிருக்க வேண்டும். வடக்கு திசை நோக்கி இருக்கும் கதவுகளில் அதிகளவில் வெள்ளி நிறத்திலான வண்ணத்தில் வேலைப்பாடுகள் இருக்க வேண்டும். கிழக்கு திசையில் இருக்கும் கதவுகளில் மரத்தினால் வேலைப்பாடுகள் மற்றும் குறைந்த அளவிலான உலோக பாகங்களால் கொண்டு அலங்கரிக்கப்பட்டிப்பது நல்லது.

entry-storm-sliding-doors

நுழைவாயிலில் உடைந்த மரத்துண்டுகளோ அல்லது மரச்சில்லுகளோ அல்லது தவற விடப்பட்ட திருகுகள் போன்ற எதுவும் இருக்கக்கூடாது. தேவையில்லாமல் கூடுதலாக இருக்கும் ஆணிகளை எல்லாம் கட்டாயம் அகற்றப்பட வேண்டும். எப்போதும் கதவில் பெயர்ப்பலகை இருக்க வேண்டும். ஒருவேளை கதவானது வடக்கு அல்லது தெற்கு திசை பார்த்தவாறு இருந்தால், அந்த கதவில் உலோகத்திலான பெயர்ப்பலகை வைப்பது சிறந்தது. ஒருவேளை கதவானது தெற்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு இருந்தால், அந்த கதவில் மரத்திலான பெயர்ப்பலகை வைப்பது நன்மையை தரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வீட்டில் கண்ணாடி மாட்டுவதற்கான வாஸ்து விதிகள்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Door vastu in Tamil. It is also called as Kadhavu vastu tips in Tamil or Thalaivasal vastu in Tamil or Veedu vasapadi in Tamil or Kathavugal vastu in Tamil.

- Advertisement -