மொறுமொறுன்னு போண்டா 10 நிமிஷத்தில் தோசை மாவிலேயே சுடலாமா அதெப்படி? கிரிஸ்பியான தோசை மாவு போண்டா ரெசிபி இதோ!

dosa-maavu-bonda_tamil
- Advertisement -

போண்டா செய்வதற்கு புதிதாக எந்த பொருட்களையும் நாம் தேட வேண்டிய அவசியம் இனி இல்லை. நம் வீட்டில் இருக்கும் கொஞ்சம் தோசை மாவிலேயே சூப்பரான போண்டாக்களை தயார் செய்து அசத்தலாம். சுடச்சுட மிருதுவான மற்றும் மேலே மொறுமொறுன்னு இருக்கக்கூடிய இந்த தோசை மாவு போண்டா எப்படி எளிதாக தயாரிக்கலாம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

தோசை மாவு – ஒரு கப், ரவை – கால் கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – இரண்டு, இஞ்சி துருவல் – ஒரு ஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

தோசை மாவு போண்டா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு தோசை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக எல்லோருடைய வீட்டிலும் தோசை மாவு ஸ்டாக்கில் வைத்திருப்போம். மாலையில் பள்ளி திரும்பும் குழந்தைகளுக்கும், ஏதாவது சாப்பிட தோன்றும் பொழுதும் இதை எளிதில் ருசியாக செய்து சாப்பிடலாம். ஒரு கப் தோசை மாவில் கால் கப் அளவிற்கு வறுத்த ரவை அல்லது வறுக்காத ரவை எதுவாகினும் சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்கு கலந்து விட்டு ஊற விடுங்கள்.

பத்து நிமிடம் ரவை நன்கு ஊறிவிடும். அதன் பிறகு மாவு கெட்டி ஆகிவிடும். இப்பொழுது நீங்கள் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் சேர்த்ததும் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்பு ஒரு சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி குட்டி குட்டியாக நறுக்கி சேர்க்கலாம் அல்லது துருவியும் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாசனைக்கு மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்க்கலாம். வெறும் மிளகுத்தூள் மட்டும் கூட நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.

தோசை மாவில் உப்பு ஏற்கனவே இருக்கும் எனவே இந்த போண்டாவுக்கு தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு உப்பை தூவி கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை பிரஷ்ஷாக நறுக்கி சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒன்று போல் நன்கு கலந்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு அடுப்பில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் போண்டா பொரிக்க தேவையான அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
எல்லாவிதமான சமையலுக்கும் சேர்த்து குழம்பு மிளகாய்த்தூளை இப்படி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சமைக்கும்போது சாம்பாருக்கு, குழம்புக்கு, வறுவலுக்கு என்று தனித்தனியாக மசாலாவை தேடி திரிய வேண்டிய அவசியமே இருக்காது.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை கரண்டியால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே இடைவெளி விட்டு ஊற்றுங்கள். போண்டா நன்கு வெந்து மிதந்து வரும். அந்த சமயத்தில் எல்லாவற்றையும் ஒன்று போல வேக திருப்பிப் போட்டுக் கொண்டே இருங்கள். மிதமான தீயில் வைத்து செய்யும் பொழுது உள்ளே நன்கு மிருதுவாக, வெளியே மொறு மொறுப்பாக வெந்து மேலே எழும்பும். அவ்வளவுதான், இப்பொழுது கிரிஸ்பியான தோசை மாவு போண்டா ரெடி!

- Advertisement -